August 31, 2025
  • August 31, 2025
Breaking News
January 23, 2021

சில்லுக் கருப்பட்டி நடிகர் அதிர்ச்சி மரணம்

By 0 510 Views

இயக்குநர் ஹலிதா ஷமீம் டைரக்ஷனில் ரிலீஸான  சில்லு கருப்பட்டி நல்ல விமர்சனங்களையும் விருதுகளையும் பெற்றது.

நான்கு வெவ்வேறு கதைகளை கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தது.

இப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீராம். படத்தில் வயது கடந்த காதல் கதையில்  நடித்திருந்த அவர் க்ராவ் மகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையில் தேந்தவர். அத்துடன் தமிழக போலீஸாருக்கு தற்காப்பு பயிற்சியும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது வீட்டு மாடியில் பயிற்சியில் இருந்த போது, அவர் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் படக் குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.