November 21, 2024
  • November 21, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • சேவகர் திரைப்பட விமர்சனம்

சேவகர் திரைப்பட விமர்சனம்

By on October 25, 2024 0 50 Views

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஆகட்டும், போலீஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகட்டும் எல்லோரும் மக்களைக் காக்கும் சேவகர்களே என்று இந்தப் படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கோபிநாத்.

ஆனால் அவர்கள் எல்லோரும் அப்படி இருக்கிறார்களா என்பது பெரிய கேள்வி அப்படி மக்களை பாதுகாக்க அந்த சேவகர்கள் தவறினால் மக்களில் ஒருவனே அந்த வேலையை செய்து விட முடியும் என்றும் நாயகன் பிரஜின் மூலம் காட்டியிருக்கிறார் .

அப்படி மந்திரி, எம்.எல்.ஏ, போலீஸ் என்று அத்தனை பேரும் ஊழல்வாதிகளாக இருக்கும் ஒரு ஊரில் மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டு ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பிரஜின்.

ஆனால் அப்படி மக்களிடம் செல்வாக்கு பெற இவர் முயல்வதை அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா என்ன..? பிரஜினை முடக்குவதற்குப் பல வகையிலும் அவர்கள் முயல, முடிவு என்ன ஆனது என்பது கதை. 

பிரஜின் மிகவும் மென்மையானவர். ஆனால் இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் மிக வலுவானது அத்துடன் ஆக்ஷன் ஹீரோ வேடமும் கூட. அதற்காகவே அவரைக் கொஞ்சம் முரட்டு லுக்கில் காண்பிக்க வேண்டி தாடி மீசை எல்லாம் அளவுக்கு அதிகமாக வளர்க்க வைத்துருக்கிறார்கள். 

ஆனாலும் கூட அவரது மென்மைத்தனத்தை மாற்ற முடியவில்லை. என்றாலும் நல்ல வசன உச்சரிப்புடன் எனக்கும் நடிக்க வரும் என்று காட்டியிருக்கிறார். பிரஜின்…

அவருக்கு ஜோடியாக வருகிறார்          முதல் காட்சியிலேயே அவர் கதைக்குள் வந்து விட்டாலும் அதற்குப்பின் என்ன செய்வது என்று தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்.