April 18, 2025
  • April 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • டோக்கியோ பட விழாவில் ராஜீவ் மேனன் இயக்கி ஜி.வி நடித்த ‘சர்வம் தாளமயம்’
October 6, 2018

டோக்கியோ பட விழாவில் ராஜீவ் மேனன் இயக்கி ஜி.வி நடித்த ‘சர்வம் தாளமயம்’

By 0 1081 Views

‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ வெற்றிப் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையைக் கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.

இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சினைகளைத் தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.

தற்போது இப்படம் 31வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்படவுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘நெடுமுடி வேணு’, ‘அபர்ணா பாலமுரளி’, ‘வினீத்’, ‘டி டி’ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தமிழ்நாட்டுல எப்ப திரையிடுவீங்க மேனன்..?