August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சென்னையில் தபங் 3 சல்மான் கான் – பிரபுதேவாவுடன் நடனம் ஆடினார்
December 16, 2019

சென்னையில் தபங் 3 சல்மான் கான் – பிரபுதேவாவுடன் நடனம் ஆடினார்

By 0 754 Views

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ‘தபங்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான ‘தபங் 3’ பிரபுதேவா இயக்கத்தில்  டிசம்பர் 20 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மொழிகளில் வெளியாகிறது.

‘தபங்’ படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன்  வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.

படம் தமிழ் மொழியில் வெளியாவதையொட்டி சல்மான் கான், தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ், இயக்குநர் பிரபுதேவா, வில்லன் சுதீப், நாயகி மாஹி கில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

சந்தோஷமாக இருந்த சல்மான்கான் பேசியது…

“வாண்டட்’ படத்தின் ஷூட்டிங் ஒரு மாதம் இங்கு சென்னையில் நடந்தது. அப்புறம் சீயான் விக்ரமின்  சேதுவை ரீமேக் செய்து  நடித்திருக்கிறேன். எப்போதும் தென்னிந்திய படங்களை ரிமேக் செய்வதில் எனக்கு அதிக ப்ரியம் உண்டு. நடிகராக மாறுவதற்கு முன்பு ஒரு விளம்பரபடத்திற்காக இங்கு வந்திருக்கிறேன். சென்னை பற்றி நிறைய நல்ல நினைவுகள் உள்ளது.

எனக்கு பிரபுதேவாவை பற்றி தெரியும்  அவர் வேலை செய்யும் விதம் எனக்கு பிடிக்கும். என்னை நன்றாக ஆட வைப்பார், ஹியூமர் செய்ய வைப்பார். அதனால் இந்தப்படத்திற்கு அவர் இருந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தோம். அவர் மிகவும் நல்ல மனிதர். அவருடன் அடுத்த படமும் செய்கிறேன்..!

சுல்புல் ஃபாண்டே பற்றி கூறும்போது, “அவனுக்கு அவனது குடும்பம் தான் முக்கியம்.  இந்தப்படத்தின் கதை முதல் பாகத்திற்கு முன்னர் நடந்த கதையை சொல்லும். சுல்புல் ஃபாண்டே எப்படி சுல்புல் ஃபாண்டேவாக மாறினான் எனும் கதை இது. இது இந்த தொடரை முழுமைப்படுத்தும் படமாக இருக்கும்..!” என்றதுடன்…

“இந்தப்படத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் வேலை செய்திருக்கிறார்கள். இது உங்கள் படம். அங்கு இப்போது நிறைய தமிழ் படங்கள் வெற்றி பெறுகிறது. ரஜினி, கமல், விக்ரம் படங்கள் அங்கே பெரிய வெற்றி பெறுகிறது. எங்களது படங்களையும் தமிழில் ரசிக்கிறார்கள் தபாங் இங்கு வெற்றியடையும் என நம்புகிறேன்…!” என்றார்.

நிகழ்ச்சி முடிவில் சல்மான் கான், பிரபுதேவா, சுதீப் படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்கள்..!