April 2, 2026
  • April 2, 2026
Breaking News
February 10, 2026

கிரைம் திரில்லரை சயின்ஸ் ஃபிக்சனில் கொடுப்பதே ரூட் படத்தின் கதை..! – இயக்குநர் சூரிய பிரதாப்

By 0 83 Views

வெளி வரவிருக்கும் சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படமான ROOT – Running Out of Time தற்போது அதன் இறுதி வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திட்டமிட்டபடி தீவிரமாக போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ள ROOT – Running Out of Time, சஸ்பென்ஸ், எமோஷனல் மற்றும் உயர்கருத்து கொண்ட கதை சொல்லலை ஒன்றிணைக்கும் ஒரு வலுவான திரைக்கதை மற்றும் திறமையான நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளதுடன், அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இவர்களுடன் பவ்யா திரிகா, Y. Gee. மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் பல்வேறு லொகேஷன்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, படம் தற்போது முழுமையான போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. எடிட்டிங், சவுண்ட் டிசைன், இசை அமைப்பு, VFX இணைப்பு மற்றும் DI பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் விரைவாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் உருவாக்கம் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதில் தயாரிப்பாளர் ஷேக் முஜீப் தனது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

அவர் கூறியதாவது,

“அமெரிக்காவில் என் நண்பர்களுடன் சயின்ஸ் பிக்சன் பற்றி பேசிக் கொண்டிருப்பேன். அதன் பிறகு படம் தயாரிக்க முடிவெடுத்தபோது இயக்குனர் சூரி சொன்ன கதை சயின்ஸ் பிக்சன் அடிப்படையிலேயே அமைந்திருக்கவே அதை உடனே தயாரிக்க முடிவெடுத்தேன்.

எனக்கு ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்று செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதுவும் இசை நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. இப்போது இந்தப் படத்தில் இசையில் மிகவும் ஆர்வம் காட்டி இருக்கிறேன்.

ஆரம்பத்தில் வேறு ஒரு கதையை படமாக எடுப்பதாக திட்டமிருந்தது அது ஒரு கட்டத்தில் முடியாமல் போனபோது சூரியைத் தியேட்டரில் இந்த படம் செய்யலாம் என்று ஆரம்பித்து இப்போது முடிவு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

போஸ்ட்-ப்ரொடக்‌ஷனில் தற்போது உருவாகி வரும் அவுட்புட்டால் நாங்கள் மிகுந்த திருப்தியடைந்துள்ளோம். எடிட்டிங், பின்னணி இசை, VFX, சவுண்ட் டிசைன் என ஒவ்வொரு துறையும் எதிர்பார்ப்பை மீறி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ROOT என்பது தொழில்நுட்ப ரீதியாக சவாலான திரைப்படம். அந்த சவால்களை துல்லியத்துடனும் அர்ப்பணிப்புடனும் படக்குழு எதிர்கொள்வதால், நாங்கள் எதிர்பார்த்த தரத்தை அடைய முடிகிறது. ரஷ் காட்சிகளும் தற்போதைய கட்-களும் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. பார்வையாளர்கள் திரையில் தீவிரமும் புதுமையும் நிறைந்த ஒரு அனுபவத்தை உணர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அறிந்த முகங்களோ அறியாத முகங்களோ திறமைக்கு நாங்கள் எப்போதுமே வாய்ப்பு கொடுப்பதாக இருக்கிறோம். அத்துடன் பட தயாரிப்பின் தலைமை நிர்வாகியாக டாக்டர் டி. அலிஸ் ஏஞ்சலை பணி அமர்த்தியதில் திட்டமிட்டபடி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன..!”

இயக்குனர் சூரிய பிரதாப் படம் பற்றி கூறியதாவது…

“இதற்கு முன்பு வெப் சீரிஸ் இயக்கியிருக்கிறேன். அதன் அடிப்படையில் திரைப்படத்திற்கு என்று சில கதைகள் எழுதி வைத்திருந்தேன். அதில் இந்த கதையை தயாரிப்பாளர் முஜீப் தேர்ந்தெடுத்தார்.

ஆரம்பத்தில் இந்த கதைக்குள் நாயகன் கௌதம் கார்த்திக் எப்படி வருவார் என்று யோசித்தோம். அவரிடம் ஸ்கிரிப்ட் கொடுத்த போது இரண்டே நாட்களில் படித்து முடித்து விட்டு இந்த கதையை நான் செய்கிறேன் என்றார். அவரது ஆர்வம் எங்களுக்கு உற்சாகத்தை தந்தது. 

இதில் அவர் ஒரு காவல் அதிகாரியாக வேடம் ஏற்றிருந்தாலும் காக்கிச்சட்டை போட்டுக் கொண்ட வரமாட்டார். ஆனால் ஒரு காவல் அதிகாரிக்குரிய மிடுக்கில் அருமையாக நடித்திருக்கிறார். நியாயமாக அவர் இதுவரை நடித்த பாத்திரங்களிலேயே இந்த பாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கும். 

சயின்ஸ் ஃபிக்சன் தொடர்பான படமாக ஆனதால் கூடுமானவரை அவற்றை அறிவியலுடன் தொடர்பு படுத்தியே எடுத்து இருக்கிறோம்.

ஆனால் அதெல்லாம் படம் பார்க்கும்போது புரியாமல் போய்விடக்கூடாது என்று எளிமையான முறையில் திரைக் கதையை அமைத்திருக்கிறோம். அத்துடன் புரிந்தே ஆக வேண்டும் என்கிற இடத்தில் ஒய் ஜி மகேந்திரா அவற்றை தன்னுடைய பாத்திரத்தின் வழியாக ரசிகர்களுக்கு புரிய வைத்து விடுவார்.

படத்தில் எதிர்மறை பாத்திரம் ஏற்றிருக்கும் அபார்சக்தி குரானா வேறு யாருமில்லை. நாம் நன்றாக அறிந்து வைத்திருக்கும் ஆயுஷ்மான் குரானாவின் தம்பிதான் அவர். அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.

ஆரம்பத்தில் அவருக்கு வேறு ஒருவரை வைத்து டப் செய்ய திட்டமிட்டு இருந்தோம் ஆனால் பாத்திரத்தில் ஒன்றிய அவர் நானே பேசுகிறேன் என்று டப்பிங் பேசி இருக்கிறார்.!”

வெரஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஷேக் முஜீப், சஞ்சய் சங்கர், ராஜராஜன் ஞானசம்பந்தம், தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், உயர்தரமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்தி படத்தை உருவாக்கி வருகிறது.

தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் டி. அலிஸ் ஏஞ்சல் பட தயாரிப்பு பற்றி கூறும் போது,

“இதைத்தொடர்ந்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். புது முகங்களாக இருந்தாலும் திறமையுடன் வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும் அப்படி பல புதுமுக இயக்குனர்களின் நூற்றுக்கணக்கான ஸ்கிரிப்டுகளை பரிசீலனையில் வைத்திருக்கிறோம்..!” என்றார்.

தொழில்நுட்பக் குழு

ஒளிப்பதிவு – அர்ஜுன் ராஜா

எடிட்டிங் – ஜான் ஆபிரகாம்

இசை – அரன் ரே

CEO – டாக்டர் டி. அலிஸ் ஏஞ்சல்

ஆக்‌ஷன் கோரியோகிராபி – மிராக்கிள் மைக்கேல்

புரொடக்‌ஷன் டிசைனர் – ஜகன் நந்தகோபால்

VFX – சந்தகுமார் (ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோஸ்)

ஆடை வடிவமைப்பு – தீப்தி RJ

புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் – தனலிங்கம்

DI – பிரசாத் ஸ்டூடியோஸ்

கலரிஸ்ட் – ரங்கா

சவுண்ட் டிசைனர் – ஆனந்த் ராமச்சந்திரன்

பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்

பப்ளிக் ரிலேஷன்ஸ் – ரேகா

டிஜிட்டல் புரமோஷன்ஸ் – டிஜிட்டலி பவர்ஃபுல்

ROOT – Running Out of Time பார்வையாளர்களுக்கு நாற்காலியின் நுனியில் அமர வைக்கும் ஒரு பரபரப்பான சினிமா அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறது.