January 2, 2026
  • January 2, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 2 பாய்ண்ட் O வை வைத்து மலிவு விளம்பரம் தேடும் ராம்கோபால் வர்மா
November 27, 2018

2 பாய்ண்ட் O வை வைத்து மலிவு விளம்பரம் தேடும் ராம்கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா மீது தமிழர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், கொஞ்சம் காலமாகவே ரஜினி மீது காழ்ப்புணர்ச்சி காட்டி அவர் தவறான செய்திக்ளை வெளியிட்டு அந்த மரியாதையை இழந்து வருகிறார்.

அவ்வப்போது ரஜினியை ட்விட்டரில் வம்புக்கிழுத்து அவர் ரசிகர்களிடம் செமையாக வாங்கிக் கட்டிக்கொள்வார். அப்படியே இப்போதும் 2 பாயிண்ட் ஓ வை வைத்து ஓட்டி வருகிறார் அவர்.

ram-gopal-varma

ram-gopal-varma

அதெல்லாம் எதற்காக என்றால அவர் இயக்கியிருக்கும் ‘பைரவா கீதா’ என்ற படமும் 2 பாய்ண்ட் ஓ வெளியாகும் தினத்துக்கு ம்றுநாள் ஆந்திராவில் ரிலீசாகவிருக்கிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை ஒரு நேரடித் தெலுங்குப் படத்துக்கு ஈடாக விலை போயிருக்கும் ‘2 பாய்ன்ட் ஓ’ அலையில் தன்படம் காணாமல் போய்விடும் என்பது அவருக்கே நன்றாகத் தெரியும்.

அதனால், ‘2 பாய்ண்ட் ஓ’வை வைத்தே தன் படத்துக்கு சீப் பப்ளிசிட்டி தேடும் முகமாக அவர் தன் ட்விட்டரில் “பெரிய இயக்குநர் என்று சொல்லப்படுகிற ஷங்கர் குழந்தைகள் மட்டுமே பார்க்கக் கூடிய ‘2 பாய்ண்ட் ஓ’ படத்தை எடுத்திருக்கிறார். ஆனால், நான் தயாரித்த பைரவா கீதா படத்தை எடுத்திருக்கும் சின்னப்பையன் பெரியவர்களுக்கான படத்தைத் தந்திருக்கிறான்…” என்று நக்கலடித்திருக்கிறார்.

இந்த தந்திரம் தேவையா வர்மா..?