அடுத்தடுத்து சமந்தா மற்றும் தனுஷ் திருமண உறவுகள் விவாகரத்தில் வந்து முடியஇயக்குநர் ராம் கோபால் வர்மா திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே அடிக்கடி ரஜினி பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்மறையான கருத்துக்களை சொல்லி அவரது ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இப்போது ரஜினி குடும்பத்துக்குள் ஒரு பிரச்சனை என்றதும் இப்படி விவாகரத்தை ஆதரித்து கருத்துக்களை கூறியிருப்பதும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
”பிரபலங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகள் குறித்து இளைஞர்களை எச்சரிப்பதற்கான நல்ல ட்ரெண்ட் செட்டர்களாக இருக்கின்றன. திருமணத்தை விட எதுவும் காதலை விரைவாகக் கொல்வதில்லை. காதல் நீடித்திருக்கும் வரை காதலிப்பதே மகிழ்ச்சிக்கான ரகசியம். அதன்பிறகு திருமணம் என்னும் சிறைக்குள் சிக்காமல் கடந்து போய்விட வேண்டும்.
திருமணத்தில் உள்ள காதல், அவர்கள் அந்தக் காதலைக் கொண்டாடும் நாட்களை விடக் குறைந்த நாட்களே நீடிக்கும். அதாவது 3 முதல் 5 நாட்கள் மட்டுமே. புத்திசாலிகள் காதலிக்கிறார்கள். முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
விவாகரத்துகள்தான் விஷேச நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட வேண்டும். காரணம் அதில் இருக்கும் விடுதலை. இருவரது ஆபத்தான குணாதிசயங்களைப் பரிசோதிப்பதால திருமணங்கள் மிகவும் அமைதியாக நடத்தப்பட வேண்டும்.
மகிழ்ச்சியின்மை மற்றும் சோகம் ஆகியவற்றின் தொடர்ச்சியை அறிவிப்பதில் நம்முடைய மோசமான முன்னோர்களால் சமூகத்தில் திணிக்கப்பட்ட மிகவும் மோசமான சடங்குதான் திருமணம்”.