November 21, 2024
  • November 21, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஷெரின் நடிக்கும்போது பார்க்க ஆசைப்பட்ட இசையமைப்பாளர்
February 26, 2022

ஷெரின் நடிக்கும்போது பார்க்க ஆசைப்பட்ட இசையமைப்பாளர்

By 0 343 Views

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”. இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள,  இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான், தொழிலதிபர் ஏ.சி. சண்முகம், இயக்குநர் RV உதயகுமார், T. சிவா, , நடிகர் ஜீவன், அடி தடி முருகன், தினா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை, உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…

“ரஜினிக்கு இன்று திருமண நாள். இந்த இனிய நாளில் “ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீடு நடப்பது சிறப்பு. தம்பி பழனிவேல் தொடர்ந்து திரைப்படங்கள் எடுக்கும் நல்ல பண்பாளர், இந்த பெயருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் படமெடுக்கும் திறமை பெற்றவர் இயக்குநர் A.வெங்கடேஷ். ரஜினி பெயரில் நடிக்கும் சிறப்பை பெற்றிருக்கிறார் தம்பி விஜய் சத்யா. இப்படம் அருமையான வெற்றியை பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

AC சண்முகம் பேசியது…

” நடிகர் விஜய் சத்யாவிடம் ஜெயம் ரவி சாயல் இருக்கிறது. அவர் சினிமாவில் கண்டிப்பாக நல்லதொரு இடத்தை அடைவார். ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான அம்சம் அவரிடத்தில் தெரிகிறது. ஒரு தாயின் பிரசவம் போல் தான் ஒவ்வொரு படமும். இப்படத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியிருக்கிறார்கள்.

இசை சேனல்களில் பாடலில் இசையமைப்பாளர், பாடகர் பெயர் போடுகிறார்கள் ஆனால் தயாரிப்பாளர் பெயர் போடப்படுவதில்லை இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!”

நடிகர் ஜீவன்…

“இந்தப்படம் பெயர் ரஜினி. அதை தவிர இந்தப்படத்திற்கு எந்த விளம்பரமும் தேவை இல்லை. அந்தப்பெயரே படம் பற்றி சொல்லிவிடும். இந்தப்பட ஹீரோ விஜய் சத்யா, நடிகை ஷெரீன் இருவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் வெங்கடேஷ் அவர்களுடன் படம் செய்ய ஆசை, நீண்ட காலமாக தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன்..!”

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..

“இந்தப்படம் பற்றி சொன்னபோது ஏதோ சின்ன படம் எடுக்கிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் இந்தப்பட இன்விடேசன் பார்த்த போது பிரமிப்பாக பிரமாண்டமாக இருந்தது. இங்கு வந்து பார்த்த போது ‘ஏய்,’ ‘பகவதி ‘ போல் பிரமாண்டமாக தெரிகிறது. நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். டிரெய்லர் காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தது, தனுஷிடன் நடித்தவர்கள் அம்மாவாக கூட நடிக்க முடியாமல் இருக்கும் போது அவருடன் நடித்த நடிகை ஷெரீன் புதுமுக நாயகி போல் அழகாக இருக்கிறார்..!”

தயாரிப்பாளர் K.ராஜன்…

” ரஜினி என பெயர் வைத்ததால் இந்தப்படம் ஜெயிக்கும் என்கிறார்கள். பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது . கதை இல்லாவிட்டால் எந்த பெரிய நடிகர் படமும் ஜெயிக்காது. கதை தான் முக்கியம். A.வெங்கடேஷ் கண்டிப்பாக கதை வைத்திருப்பார்.

நாயகனுக்கு உண்டான எல்லா அம்சமும் விஜய் சத்யாவிடம் இருக்கிறது. அந்த தம்பியை பார்க்கும் போதே ஒழுக்கம் நிறைந்தவர் என தெரிகிறது. தயாரிப்பாளரை மறக்காமல் இருந்தால் தான் நீங்கள் வளர்வீர்கள், எல்லோரும் நல்லா வர வேண்டும் அதே நேரம் தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள்.

காணாமல் போன ஷெரீன் சேலை கட்டி வந்திருக்கிறார். சேலை கட்டிய தமிழ் பெண்ணாக மாறுங்கள். தமிழ் சினிமா உங்களை வாழவைக்கும்..!”

தயாரிப்பாளர் T. சிவா…

“இது ஒரு மகிழ்ச்சியான குடும்ப விழா, இயக்குநர் வெங்கடேஷ் அவர்களின் தீவிர ரசிகன். கமர்ஷியலாக நிறைய படங்கள் எடுத்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர், என பலரை வாழவைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்பமாக அமைய வேண்டும்,

நண்பர் பழனிவேல் பலமுறை வீழ்ந்தாலும் மீண்டும் படமெடுப்பவர், அவர் மாதிரி ஒரு சிலரால் தான் சினிமா உயிரோடு இருக்கின்றது. அவரது முயற்சிக்கும், உழைப்புக்கும் இந்தப்படம் ஒரு பெரிய வெற்றியை தரவேண்டும். நாய்கன் நல்ல ஸ்மார்ட்டாக இருக்கிறார். விழா நாயகன் இசையமைபபாளர் அம்ரீஷ் அவருடன் இணைந்து நான் வேலை செய்யும் போது நல்ல பாடல்கள் வரும். அவர் கடினமான உழைப்பாளி, அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு வரவேண்டும்..!”

இயக்குநர் RV உதயகுமார்…

“ஒரு அழகான மேடை வர்ணனையாளரிலிருந்து நாயகன் நாயகி வரை அனைவரும் அழகாக இருக்கிறார்கள். இந்தப்படம் சூப்பர்ஸ்டார் படம் மாதிரி மிகப்பெரிய வெற்றி பெறும், சினிமாவில் ரஜினி வேறு வெற்றி வேறு இல்லை. அந்த பெயரை பிடித்து வைத்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மும்பையில் இன்னொரு படமும் எடுத்துகொண்டிருக்கிறார்.
இயக்குநர் வெங்கடேஷ் அழகாக படமெடுத்துள்ளார்..!”

நடிகை ஷெரீன்…

“படத்தில் விஷிவல், பாட்டு எல்லாமே சூப்பராக இருக்கிறது. எங்கள் படத்திற்கு கவர்ச்சியே ஹீரோ தான். அவர் படம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடாமல் 8 பேக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். அவரை பார்க்க வைத்து கொண்டு நான் பிரியாணி சாப்பிட்டு கடுப்பேற்றியிருக்கிறேன்.

உண்மையில் அவர் மிக மிக அழகாக இருக்கிறார். எங்க டைரக்டர் அட்டகாசமாக படமெடுத்துள்ளார். அவருடன் வேலை செய்தது அருமையான அனுபவம். இந்தப்படத்திற்கு நிறைய கஷ்டப்பட்டுள்ளோம். விழுந்து, அடி வாங்கி கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம்..!”

இசையமைப்பாளர் அம்ரீஷ்…

“ரஜினி தலைவர் டைட்டில் எங்களுக்கு கிடைத்தது சந்தோசம், அவரது திருமண நாளில் இந்த விழா நடப்பது மகிழ்ச்சி. தலைவருக்கு வாழ்த்துக்கள். நாயகன் பயிற்சி எடுத்து உடலை அட்டகாசமாக வைத்துள்ளார். நான் வெங்கடேஷ் சாரின் ரசிகன். மாஸ் கமர்ஷியல் இசையமைப்பாளர் என சொல்கிறார்கள் .

ஆனால் இந்தப்படத்தில் ஒரு மெலடி பாடல் தந்தார் சித்ஶ்ரீராமை பாடவைத்துள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கு நன்றி. இப்படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. நாயகி ஷெரீன் மிக அழகாக இருக்கிறார். அவரை வைத்த எடுத்த பாடலுக்கு ஷூட்டிங்கு என்னை கூப்பிடவில்லை, இனிமேல் என்னையும் கூப்பிடுங்கள்..!”

நாயகன் விஜய் சத்யா…

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த அண்ணன் பழனிவேல் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் வெங்கடேஷ் சார் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுத்தவர், என்னை வைத்து படமெடுப்பாரா என நினைத்தேன், என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் அம்ரீஷ் உடைய அழகான பாடலுக்கு நன்றி. இப்போது தான் பயணம் ஆரம்பித்துள்ளது வெற்றிப்பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன்..!”

இயக்குநர் A. வெங்கடேஷ்…

“இந்தப்படத்தின் கதையை தயாரிப்பாளர் தரப்பில் ரெடி செய்து வைத்திருந்தார்கள், நாயகன் விஜய் சத்யா தான் என்னிடம் இந்தக்கதையை சொன்னார். கதை சொன்னவுடன் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. ரஜினி டைட்டில் இந்த படத்திற்கு பொருத்தமாக ஈர்ப்புடன் இருந்தது.

பழனிவேல் சார் தான் இந்த வாய்ப்பு தந்தார். எல்லாவற்றையும் இயக்குநர் முடிவுக்கு விட்டுவிடுவார். அவருக்கு வாத்தியார் எனும் படம் செய்தேன். அந்த படம் போல் இந்தப்படம்ஜ்ம் அவருக்கு பெரிய அளவில் லாபம் சம்பாதித்து தரும்.

ஷெரீன் மிக சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். ஒளிப்பதிவு, எடிட்டிங் அபாரமாக செய்துள்ளார்கள். 30 நாளில் இந்தப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளேன். அம்ரீஷ் அருமையான இசையை தந்துள்ளார்..!”

இத்திரைப்படம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.