July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • அம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி
December 3, 2018

அம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி

By 0 1122 Views
மகாரஷ்டிரா நாசிக் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயி சஞ்சய் சாதே. தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் பேசி  மொத்த வெங்காயத்தையும் விற்றுக் கிடைத்த 1064 ரூபாய் பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது தெரிந்திருக்கும்.
 
அப்படி நாசிக் விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன், இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் ப்திவிட்டிருப்பது…
 
“பிரதமர் நரேந்திர மோடி இருவிதமான இந்தியாவை உருவாக்குகிறார். ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த வேலையும் செய்யாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், 750 கிலோ வெங்காயத்தை வெறும் 1064 ரூபாய்க்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.