சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாலும், வெயிலின் கடுமை அதிகரித்திருப்பதாலும் தனித்திருந்தபடி நோயில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நடிகர் ராதாரவி கோத்தகிரி அருகே உள்ள தனது பங்களாவுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்றார்.
இது குறித்து கேள்விப்பட்ட கோத்தகிரி பகுதி சுகாதரத்துறை அதிகாரிகள், ராதாரவியின் பங்களாவுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் அவர் அனுமதி பெற்று வந்திருப்பதாகவே மேலிடத்துக்கு போன் போட்டு காண்பித்தாராம்.
ஆனாலும் தற்போதுள்ள ஊரடங்கு விதிமுறைகளின்படி சென்னையிலிருந்து வந்திருப்பதால் அவர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்களாம்.
இதைத்தொடர்ந்து ராதாரவிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கொரோன தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனைகளின் முடிவு இன்னும் வரவில்லை. என்றாலும் ராதாரவி குடும்பத்தினர் 14 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அவரது பங்களாவை அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.
அதோடு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற அறிவிப்பையும் கதவில் ஒட்டி விட்டார்களாம்.
கோத்தகிரி போனாலும் கொரோ நானா சோதனை விடவில்லையே?