உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் ‘சிண்ட்ரல்லா’ . இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட ‘சிண்ட்ரல்லா’ என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது.
ராய் லஷ்மி பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் . இவர்கள் திரையரங்கு , 100க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோகம் திரை அனுபவம் பெற்றவர்கள்.
படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும் போது, ” இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும்.
படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார். நடிகை ராய் லஷ்மிக்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார்.
நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம் , குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு சம்மதம் கூறினார். மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார். தெளிவு பெற்றார். இப்போது முழுமையாக ‘சிண்ட் ரல்லா’வுக்குள் புகுந்து விட்டார் ” என்று கூறினார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.