January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பெரியாண்டவர் யோகிபாபுவுக்கு பெரிய நாயகி சிக்குவாரா? – ஆர் கண்ணன் வீசும் வலை
May 23, 2022

பெரியாண்டவர் யோகிபாபுவுக்கு பெரிய நாயகி சிக்குவாரா? – ஆர் கண்ணன் வீசும் வலை

By 0 662 Views

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “பெரியாண்டவர்” பட நியூஸ் வெளிவந்த ஒரே நாளில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது.

திடீரென பூமிக்கு வரும் சிவன், வழியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். சிவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும், நாட்டின் இன்றைய நடப்பு மற்றும் சுவாரஸ்யமான பேச்சுகள் தான் படத்தின் கதை . சீரியசான விஷயத்தை காமடி பாணியில் சொல்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன்.
சிவனாக யோகிபாபு நடிப்பதால் படத்தின் எதிர் பார்ப்பு அதிகமாகியுள்ளது.
அதனால், கதையில் சிவனை சந்திக்கும் பெண் கேரக்டரில் பெரிய ஹீரோயினை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆர்.கண்ணன்.

மசாலா பிக்ஸ் நிறுவனம் 9வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.