June 30, 2025
  • June 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எட்டு வருடங்களாக நினைவில் தாங்கிய கதை மரைக்காயர் – இயக்குனர் பிரியதர்ஷன்
December 3, 2021

எட்டு வருடங்களாக நினைவில் தாங்கிய கதை மரைக்காயர் – இயக்குனர் பிரியதர்ஷன்

By 0 358 Views

டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்.

மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சித்தி, முகேஷ், சுஹாசினி மணிரத்னம், மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிரார்கள்.

வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய குஞ்சாலி மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிச்சிருக்கிறார்.  

16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதை இது என சொல்லப்படுகிறது. இவரே இந்திய கடற்படை எல்லையில் முதல் கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவர் என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றிருந்தது மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படம் இன்று வெளியாகி இருக்கிறது.