November 28, 2023
  • November 28, 2023
Breaking News
March 20, 2018

இளையராஜா, தோனி இன்று ‘பத்ம விருது’ பெறுகின்றனர்

By 0 919 Views
President

President Ramnath Kovind

‘பத்ம விருது’ அறிவிக்கப்பட்ட 84 வெற்றியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுகின்றன. 

2018 ம் ஆண்டைப் பொறுத்த அளவில் 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இசையமைப்பாளர் இளையராஜா உட்பட மூன்று பேருக்கு ‘பத்ம விபூஷண்’, கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு ‘பத்ம பூஷண்’, தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பத்ம விருது வென்றவர்களுக்கு நேற்று (19-03-2018) இரவு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்து அளித்தார்.

இன்று(மார்ச் 20, 2018) இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.