April 23, 2025
  • April 23, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிசாசு 2வை நல்லவிதமாக பிடிக்க பூஜை போட்டு தொடங்கிய மிஷ்கின்
December 14, 2020

பிசாசு 2வை நல்லவிதமாக பிடிக்க பூஜை போட்டு தொடங்கிய மிஷ்கின்

By 0 535 Views

தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது.

‘சைக்கோ’வுக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே பலரின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இன்று ‘பிசாசு 2’ பட வேலைகள் பூஜையுடன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுகல்லில் இன்று துவங்கியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்த படத்தில் இணைந்துள்ளார்.

என்னதான் பிசாசுவைப் படம் பிடித்தாலும் அதை நல்லவிதமாகப் பிடிக்க கடவுளின் உதவி தேவை அல்லவா? அதற்கான பூஜைதான் இது..!