தமிழ் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் சித்ரா. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் தொழில் அதிபர் ஹேமந்த் ரவி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது.
2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர்.
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடிகை நிரோஷாவுடன் நடித்தும் வந்தார்.
சின்னத்திரையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்துகொண்டார் சித்ரா. நேற்று நள்ளிரவில் சூட்டிங் முடிந்து அறைக்கு திரும்பியுள்ளார்.
அப்போது ரூமில் வருங்கால கணவரும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகாலை குளிப்பதற்காக பாத்ரூம் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் சித்ரா கதவை திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமந்த் ஓட்டல் நிர்வாகிகளிடம் கூற அவர்கள் கதவை திறந்துள்ளனர்.
அப்போது சித்ரா தூக்கில் தொங்கியதை கண்டுள்ளனர். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் குறித்து விசாரித்து வருகின்றனர். உடன் தங்கியிருந்த ஹேமந்த் ரவியிடமும் விசாரணை நடந்து வருகிறது.
சித்ராவின் திடீர் மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
TV Actress Chithra Committed suicide