August 31, 2025
  • August 31, 2025
Breaking News
April 17, 2025

‘பேடிங்டன் இன் பெரு’ ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

By 0 180 Views

மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் குட்டிக் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன. 

முதல் பாகம், பெருவின் காடுகளிலிருந்து லண்டன் தெருக்களுக்கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட  கரடியான பேடிங்டனை பற்றியது.

அடுத்த பாகத்தில், செய்யப்படாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பேடிங்டன், தானொரு நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் நகைச்சுவை வரிசையில் வெளியான முதலிரண்டு பாகங்களையும் பால் கிங் இயக்கினார். 

தற்போது அப்படவரிசையில் மூன்றாவது பாகமாக ‘பேடிங்டன் இன் பெரு’ எனும் படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் டூகுல் வில்சன்.

பேடிங்டனின் அத்தையைக் கண்டுபிடிக்க ப்ரெளன் குடும்பம் பெருவின் காடுகளுக்குள் செல்கிறது. ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து பிரிந்து விட, அத்தையைத் தேடி பேடிங்டனும், அதைத் தேடி பிரவுன் குடும்பமும், தங்கப் புதையலை தேடி ஒரு வேட்டைக்காரரும் அவரைத் தேடி அவரது மகளும் என்று படம் முழுவதும் தேடுதல் வேட்டையாகவே போகிறது. 

பேடிங்டனுக்கு அவர் அத்தை கிடைத்தாரா, தங்கப் புதையலைத் தேடியவருக்கு புதையல் கிடைத்ததா, பிரவுன் குடும்பத்தினர் பேடிங்னை கண்டுபிடித்தனரா என்பதெல்லாம் விறுவிறுப்பான நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இப்படம், ஆறுகள், பழங்கால கலாச்சாரத்துடன் கூடிய செட்டுகள் என்று ஒரு சாகசப் பயணத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது.

பேடிங்டனாக வரும் குட்டிக் கரடியின் முகத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் வடிவமைத்த அனிமேஷன் வல்லுனவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒரு குடையை படகாகவும், பாராசூட்டாகவும் பயன்படுத்தி பேடிங்டன் தப்பிக்கும் காட்சிகள் மற்றும் விமான சாகசங்கள் குழந்தைகளை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கவரும். 

கிளைமாக்சில் பேடிங்டன் எடுக்கும் முடிவு நெகிழ்ச்சியானது..!

இந்தப் படத்தை உலகம் முழுக்க சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

தொழில்நுட்பக் குழு விவரம் –

The voice cast includes Hugh Bonneville, Emily Mortimer, Antonio Banderas, Olivia Colman and Ben Whishaw (voice of Paddington)
ஒளிப்பதிவு – Erik Wilson
இசை – Dario Marianelli

–  வேணுஜி