இலங்கையின் 75வது சுதந்திர தினத் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொண்ட ‘நிதாஹஸ் கோப்பை’ கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியா வெற்றி பெற கடைசி ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட, அப்போது பேட்டிங்க் செய்த தினேஷ் கார்த்திக் கடைச் பந்தில் ஆறு ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்து இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் […]
Read Moreகடந்த 2016, நவம்பர் மாதம் 8ம் தேதி, , 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. செல்லாத, பழைய 500 , 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து மக்களிடமும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட […]
Read Moreஅவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது. இப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’, […]
Read Moreசினிமாவைப் பொறுத்த அளவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும்தான் ராஜ உபசாரம் கிடைக்கும். அவர்களின் முகப்பொலிவு மாறிவிடக் கூடாதென்பதற்காக நேரத்துக்கு உறக்கம், பிடித்த உணவு, பேமென்ட் செட்டில்மென்ட் என்று எல்லா அம்சங்களிலும் அவர்களே முன்னுரிமை பெறுகிறார்கள். ஆனாலும், படங்களில் நடிப்பதுதான் கஷ்டமான வேலை என்ற அளவில் நேரம் கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கவும், உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும் வெளிநாடு பறந்து விடுவார்கள். வெளிநாடு செல்வதை ஒரு வேலையாகவே செய்து வரும் நடிகைகளுள் முக்கியமானவர் த்ரிஷா. இப்போது படங்கள் எதுவும் கையில் இல்லை […]
Read More‘யாழ்’ என்றதுமே இது இலங்கைத் தமிழரைப் பற்றிய பதிவு என்பது புலனாகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஈழப்போர் உச்சகட்டத்தை எட்டுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களில் ஆறு பேர் சந்திருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் களம். ஆனால், அது மட்டுமே கதையல்ல. கதையின் அடிநாதம், உலகெங்கும் போர் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பற்றிய கவலை. இந்தக் களத்தில் யாழ் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளைத் தொட்டுக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. […]
Read Moreதமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமிடையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை இருக்கிறதல்லவா..? இந்த நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையின் மூலத்தைச் சுருக்கி அதுவே ஒரு கேணித் தண்ணீர்ப்பிரச்சினையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறார் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். கேரளத்துக்காரரான இவர் இயக்கினால் படம் கேரளாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். மனசாட்சியுள்ள மனிதரான நிஷாத் அப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொளாமல் ‘கேணி’யளவு ஈரமுடையவராகவே இருக்கிறார் இந்தப்படத்தில். படத்தின் கதை இதுதான். கேரள – தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் கிராமத்தில் […]
Read Moreகடைசிப் பக்கம் கிழிந்த நாவலுக்கு ஒரு பரபரப்புண்டு… கிளர்ச்சியுண்டு…கடைசியில் என்னதான் நடந்திருக்கும்..? என்கிற எதிர்பார்ப்பு அடங்கமறுக்கும் அலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். இந்த உணர்வை அடிநாதமாக வைத்து ஒரு ‘ஆந்தாலஜி’ கேப்ஸ்யூலுக்குள் ஆறு கதைகளை… அதுவும் ‘ஹாரர்’களைப் படைத்திருக்கிறார்கள். உலகெங்கும் ‘ஆந்தாலஜி’ எங்கிற தொகுப்புத் திரை வடிவம் எதிர்பார்ப்பைவிட குறைவான வெற்றியையே தந்திருக்க, அதை வைத்து எப்படி வெற்றியடையலாம் என்ற நவீன சிந்தனையின் விளைவுதான் இந்த முயற்சி எனலாம். அதற்கத்தான் ஆறு கதைகளையும் அடுத்தடுத்து முழுமையாகச் சொல்லாமல் மேற்படி […]
Read More