November 28, 2023
  • November 28, 2023
Breaking News
March 19, 2018

பழைய 500, 1000 நோட்டுகளை மறுசுழற்சி செய்யவில்லை – ரிசர்வ் வங்கி

By 0 924 Views

கடந்த 2016, நவம்பர் மாதம் 8ம் தேதி, , 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதனையடுத்து புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. செல்லாத, பழைய 500 , 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து மக்களிடமும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ரிசர்வ் வங்கி அளித்த பதில் விபரம் இது.

‘வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் சரிபார்க்கும் பணிகள் முடிந்த பின் இயந்திரங்கள் மூலம் சிறு துண்டுகளாக்கப்பட்டு அந்தத் துண்டுகள், இயந்திரம் மூலம் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு கட்டிகளாக்கப்படுகின்றன. அதன் பின் அவை ஏலம் விடப்பட்டு அகற்றப்படுகின்றன.

. இந்த நோட்டுகளை சரிபார்க்கும் பணிகளில், 59 அதிநவீன இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை..!’