September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 6, 2018

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த நீட் எப்படி..?

0 923 Views

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 லட்சம் பேர் பங்கேற்றனர். வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத தமிழகத்தை சேர்ந்த, 5,500 மாணவர், மாணவியர், சென்றனர். இவர்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து, 5,371 பேர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் தேர்வு மையங்களுக்கு சென்றனர். மற்றவர்கள், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்வு மையங்களுக்குச் சென்றனர். […]

Read More
May 4, 2018

யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஸ்டாலினை சந்தித்தனர்

0 963 Views

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக அவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பாஜக அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திரசேகர் ராவைத் தொடர்ந்த சின்ஹாக்களின் […]

Read More
May 4, 2018

நீட் எழுத வெளிமாநிலம் செல்வோருக்கு பயணத்தொகையுடன் ரூ.1000 – தமிழக அரசு

0 891 Views

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதிக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மாநில அளவில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் […]

Read More
May 4, 2018

அருள்நிதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படம்

0 1190 Views

உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் த்ரில்லர் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் ‘இந்தப் படத்தின் முதல் ரசிகன் படத்தின் தயாரிப்பாளர் ‘ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு’தான். படத்தைப் பற்றி மகிழ்ச்சியோடு இப்படிப் பகிர்ந்து கொள்கிறார் அவர். “முதலில் இயக்குனர் மு. மாறன் கதை சொன்னதைக் கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாகக் கொண்டு வந்ததிலும் மகிழ்ச்சி. […]

Read More
May 3, 2018

உச்சநீதிமன்ற உத்தரவு – கர்நாடக முதல்வர் கைவிரிப்பு

0 1059 Views

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று […]

Read More