October 10, 2024
  • October 10, 2024
Breaking News
September 12, 2024

புதுமணத் தம்பதி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி பத்திரிகையாளர் சந்திப்பு

By 0 86 Views

*’டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்!*

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது.

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும்  பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

‘டான்’ படத்திற்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார்.

வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றவர் அடுத்த படவேலைகளுக்கு ஆயத்தமாகி வருவதாக சொன்னார். 

அந்த வரிசையில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமும் இருக்கிறது.