August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 3, 2022

சமுத்திரக்கனியின் மகனும் நடிகர் இயக்குநர் ஆனார்

0 597 Views

பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன். இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார். மிகவும் புத்திசாலித்தனமான கதை களத்தில் நறுக்கிய வசனத்துடன் கூடிய இந்தப் […]

Read More
January 3, 2022

தண்ணி வண்டி படத்தின் திரை விமர்சனம்

0 1061 Views

‘தண்ணி வண்டி ‘ என்றால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. நேரடியான பொருள் குடிநீரை விநியோகிக்கும் வண்டி என்பது. இன்னொரு பொருள் ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால் தண்ணி வண்டி என்றதும் நமக்கு இந்த இரண்டாவது பொருள் தான் நினைவுக்கு வந்து போகும். நம் வழக்கம் அப்படி.   படத்தில் சொல்லும் தண்ணி வண்டிக்கு இரண்டு பொருளும் உண்டு. மதுரையில் வண்டியில் தண்ணீர்  விநியோகிக்கும்  நாயகன் உமாபதி கையில் காசு புழங்கினால் நண்பன் பால சரவணனுடன் சேர்ந்து […]

Read More
January 2, 2022

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரை விமர்சனம்

0 593 Views

தலைப்பை பார்த்தவுடனேயே இது ஒரு காதல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் படத்தின் களம் என்ன என்பதில்தான் புதுமை செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன். அதற்கு ஏற்ற மாதிரியே நாயகனின் பாத்திரப் படைப்பை புதிதாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்தைத் தவிர்த்து படங்களில் நாம் பார்த்திராத சவுண்ட் இன்ஜினியர் வேடம்தான் நாயகன் ருத்ரா ஏற்றிருப்பது. தனியார் எஃப் எம்மில் ஆர்ஜே வாக இருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு நேஷனல் ஜியாக்ரபிக் […]

Read More

ஓணான் படத்தின் திரை விமர்சனம்

இன்னொரு ராக்கி படம் போல் இருக்குமோ என்று நினைக்க வைக்கும் கொலைக் கள ஆரம்பம். நாயகன் திருமுருகன் சதாசிவம் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொள்வதுபோல் டைட்டில் போடும்போது காட்சிகள் விரிகின்றன. தொடர்ந்து மனைவி குழந்தைகளைக் கொன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக நாளேட்டில் செய்தியும் வருகிறது.  படங்களில் காமெடியனாக நாம் பார்த்திருக்கும் காளி வெங்கட் இந்தப் படத்தின் முதல் காட்சியில் உடலெங்கும் ரத்த விளாறாக காவல் நிலையத்தில் வந்து சரணடைகிறார். அவர் சொல்லும் கதையில் […]

Read More
January 2, 2022

பா இரஞ்சித் முன்னெடுக்கும் பண்பாட்டு முயற்சிகளுக்கு விசிக துணை நிற்கும் – தொல் திருமாவளவன் 

0 714 Views

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் […]

Read More
January 1, 2022

தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் திரை விமர்சனம்

0 761 Views

பாலியல் வன்முறை செய்தவர்களை பழி வாங்கும் கதைகள் இந்திய படங்களில் நிறையவே வந்துள்ளன. அவற்றில் காமுகர்களை பிடித்துவந்து கொல்வதில் தொடங்கி அவர்களின் ஆணுறுப்பை அறுப்பது வரை பலவிதமான கதைகள் இங்கே சொல்லப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட கதைகள் எல்லாமே சட்டப்படி தவறானவை என்றாலும் அவை மக்களிடம் வரவேற்பு பெறுவதற்கு காரணம், சட்டப்படி அப்படிப்பட்ட குற்றத்துக்கு நீதி மன்றம் சென்றால் நீதி தாமதப்படுவதும் மறுக்கப்படுவதும்தான். அப்படியே தாமதப்பட்டு நீதி கிடைத்தாலும் அதன் தண்டனை மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. ஆனால் பாலியல் […]

Read More