July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 2, 2024

போட் திரைப்பட விமர்சனம்

0 867 Views

தமிழ் சினிமாவில் தன் வழியைத் தனி வழியாகக் கொண்டு பயணப்படும் இயக்குனர் சிம்பு தேவன் இந்தப் படத்தில் ஒரு சின்னஞ்சிறு படகுப் பயணத்தைக் கடல் வழியே மேற்கொண்டிருக்கிறார். ‘காமெடியன்ஸ் டிலைட்’ என்று போற்றக்கூடிய அளவில் நகைச்சுவை நடிகர்களை நாயகர்களாக்கிப் பார்ப்பதில் அவருக்கு எப்போதுமே அலாதிப் பிரியம்.  அப்படி வடிவேலு, சந்தானம், கருணாகரன் போன்றவர்களைத் தொடர்ந்து இந்தப்  படத்தில் யோகி பாபுவை நாயகனாக்கி ஒரு நவீனத்தைத் தந்திருக்கிறார். சராசரிப் பார்வையாளர்களுக்கு ஒரு வடிவத்தையும், அதன் பொருள் அறிந்து பார்ப்பவர்களுக்கு […]

Read More
July 31, 2024

ஜமா திரைப்பட விமர்சனம்

0 506 Views

கூத்துக் கலைதான் சினிமாவின் நதிமூலம் என்றிருக்க, இந்த சினிமாவின் மூலம் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அர்ப்பணிப்புடன் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன்.  திருவண்ணாமலைப் பக்கம் நடக்கிற அல்லது நடந்த கதையைப் படமாக இயக்கியிருக்கும் அவரே படத்தின் நாயகனாகவும் நடித்திருப்பது சிறப்பான விஷயம். கூத்தின் குழுதான் ஜமா என்று அழைக்கப்படுகின்றது. அப்படி ஒரு ஜமாவில் பெண் வேடமிட்டு நடிக்கிறார் பாரி இளவழகன். இதனால் அவரது உடல் மொழி, பழகும் விதம் முதற்கொண்டு […]

Read More
July 30, 2024

இரண்டு வயது குழந்தைக்கு முதுகுத்தண்டு உருக்குலைவு திருத்தல் அறுவை சிகிச்சை..!

0 449 Views

2-வயது குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. வங்காளதேசத்தைச் சேர்ந்த பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த 2-வயது குழந்தைக்கு நாட்கள் செல்லச்செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக்கொண்டே போனது. குறிப்பாக, சிறிது நேரம் விளையாடியபிறகு குழந்தையின் கால்களில் பலவீனம் ஏற்பட தொடங்கியது. ஆறு மாத வயதில் குழந்தையின் முதுகுத்தண்டை காசநோய் பாதித்தது. அக்குழந்தை ரேடியல் ரோட்டில் உள்ள  காவேரி மருத்துவமனைக்கு […]

Read More
July 26, 2024

ராயன் திரைப்பட விமர்சனம்

0 452 Views

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது உலகறிந்த விஷயம். ஒரு சிறந்த இயக்குனராகவும் தான் அறியப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் தன் நடிப்பில் அமைந்த இந்த 50ஆவது படத்தைத் தானே இயக்கியும் இருக்கிறார். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து இரண்டு தம்பிகள், கைக் குழந்தையான தங்கையோடு தலைநகரம் வந்து சேரும் தனுஷ் தன் தம்பிகள் தங்கையை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லும் கதைக்களம்.  வாலிப வயது வரையான கதையை புத்திசாலித்தனமாக மறைத்துவிட்டு, அனைவரும் வளர்ந்த […]

Read More
July 26, 2024

டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் சட்னி சாம்பார் சீரிஸ் ஜூலை 26 முதல் ஒளிபரப்பாகிறது

0 268 Views

யோகி பாபு நடிப்பில், “சட்னி சாம்பார்” சீரிஸிற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தனித்துவமான விளம்பரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு […]

Read More
July 25, 2024

மெட்ராஸ்காரன் படத்தில் புதுக்கோட்டைக் காரனாக நடித்திருக்கிறேன்..! – கலையரசன்

0 542 Views

*SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”   திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா* நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்,  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீடு !! SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள […]

Read More
July 25, 2024

ஷங்கர் சார் வரை ரீச் ஆகி இருக்கிறது மின்மினி – இயக்குனர் ஹலிதா ஹமீம்

0 325 Views

*’மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா!* ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “‘மின்மினி’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் […]

Read More