January 27, 2026
  • January 27, 2026
Breaking News
August 30, 2019

சிம்புவை முறைப்படுத்த எழுவர் குழு அமைப்பு?

By 0 988 Views

என்ன செய்தால் சிம்புவை வழிக்குக் கொண்டுவர முடியுமென்று தயாரிப்பாளர்கள் வேதனை கொள்ளாத நாளில்லை. முக்கியமாக அவரை வைத்துப் படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பெருத்த தலைவலி.

அதனால், சிம்புவால் பாதிக்கப்பட்ட அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி பணம் பெற்றுக்கொண்டு நடிக்கவராத காரணத்தால் சிம்புமீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், பிறகு எடுக்கப்பட்ட முடிவில் சிம்பு ஒத்துக்கொண்ட அடிப்படையில் படங்களை முடித்துக் கொடுக்க ஏதுவாக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்க வகை செய்யப்பட்டிருக்கிறதாம்.

இந்த எழுவர் குழு பொறுப்பேற்று சிம்புவை ஒவ்வொரு நாளும் தயார்ப்படுத்தி படப்பிடிப்புகளுக்கு அனுப்பிவைப்பதுடன் அவரைக் கண்காணித்து படங்களை முடித்துக் கொடுக்க வழிவகை செய்யுமாம்.

அந்த அடிப்படையில் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருக்கும் சிம்பு வந்ததும் முதலில் ஞானவேல்ராஜாவுக்காக நடித்துக் கொடுக்க வேண்டிய படத்தை முடித்துக் கொடுக்க முடிவாகி இருக்கிறதாம்.

சிம்பு படத்தை முடிக்க தயாரிப்பாளர்கள் என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது..?