January 27, 2026
  • January 27, 2026
Breaking News

டிவி செய்தியாளர் வரதராஜன் வெளியிட்ட வைரல் வீடியோ – 4 பிரிவுகளில் வழக்கு

By on June 9, 2020 0 777 Views

தொலைக்காட்சி செய்தியாளரும் நடிகருமான வரதராஜன் இன்று ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் பரவ விட்ட வைரல் ஏற்படுத்தினார்.

அந்த காணொளியில் அவரது உறவினர் புரோனோ நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் அவரை அட்மிட் செய்வதற்கு பல மருத்துவ மனைகளுக்கு அலைந்தும் அவருக்கு படுக்கை வசதி இல்லாததால் அட்மிஷன் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “வரதராஜன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய இட வசதி இருக்கிறது. இதனால் தவறான செய்தி பரப்பிய வரதராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் … ” என்று கூறினார்.

இந்நிலையில் வரதராஜன் மீது மருததுவமனை நிர்வாகத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப் பட்டதாகத் தெரிகிறது.

கீழே வரதராஜன் வெளியிட்ட வைரல் வீடியோ…