July 3, 2025
  • July 3, 2025
Breaking News
May 11, 2021

கிணத்தைக் காணோம் புகழ் நெல்லை சிவா திடீர் மரணம்

By 0 615 Views

அன்றாடம் ஒரு சினிமா பிரபலம் இறந்து வருவது கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இன்று மாலை பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா மரணமடைந்தார்.

வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்த நெல்லை சிவா பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்

இப்போது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சொந்த ஊரான திருநெல்வேலியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

நெல்லை சிவா கோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தவர். நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார். சின்ன வேடத்தில், சில நிமிடங்கள் வந்து சென்றாலும், தன்னுடைய நெல்லை உச்சரிப்பில் அழகாகப் பேசி கவர்ந்து விடும் சிவா, ஆண்பாவம் படத்தில் அறிமுகம் ஆனார்.

கற்றது களவு, சகுனி என்று கிட்டத்தட்ட 150 படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.

75 வயதான நெல்லை சிவாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை..!