வன்முறைப் பாதைக்கு செல்லும் நாயகனின் (இன்னொரு) கதையைக் கொண்ட படம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்றிருக்க இதில் வன்முறைப் பாதைக்குச் செல்லும் நாயகன் ராஜ் கிருஷ்ணன் என்ன ஆகிறார் என்பது கதை.
சிறு வயதில் இருந்து ஒன்றாக வளரும் ராஜ்கிருஷ்ணன், மற்றும் இந்துஜா வாழ்க்கை சூழலால் பிரிகின்றனர். எதிர்பாராத விதமாக சண்டையில் ஒருவனை ராஜ் கிருஷ்ணன் கொன்று விட, இதைக் கண்ணுறும் தாதாவான அண்ணாச்சி சத்யா முருகன், அவரை மீட்டு தன் அடியாளாக வைத்துக்கொள்கிறார்.
தன் உயிரைக் காப்பாற்றிய அண்ணாச்சியின் சொல்லைத் தட்டாமல் வாழும் ராஜ் கிருஷ்ணன், அவர் சொல்படி அவரது மகனையே கொன்று விடுகிறார்.
இதற்கிடையில் இந்துஜாவை சந்திக்கும் ராஜ் கிருஷ்ணன் வன்முறைப் பாதையில் இருந்து விலகி குடும்ப வாழ்வில் ஈடுபட விரும்ப, அதற்கு அண்ணாச்சியே எதிராக, என்ன ஆனது என்பது மீதிக் கதை.
படத்தில் நடித்திருக்கும் அனைவருமே புதுமுகங்கள் என்பது பாராட்டத்தக்க அம்சம். அவர்களை சரியாக வேலை வாங்கி இருக்கும் இயக்குனர் கே கே பத்மநாபன் பாராட்டுக்குரியவர்.
அண்ணாச்சியாக வரும் சத்யா முருகன் மிரட்டி இருக்கிறார். இந்த வயதிலும் என்ன ஒரு உடற்கட்டு… என்ன ஒரு ஆற்றல்..? சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் ராஜ்கிரணுக்கு டஃப் கொடுக்கும் நடிகராக மிளிர்வார்.
ஹிதேஷ் இசையும், முருகவேலின் ஒளிப்பதிவும் பதெட்டுக்கு ஏற்ப பயணித்துக்கின்றன.
பட்ஜெட்டும், முதல் நிலை நடிகர்களும் கை கொடுத்திருந்தால், இன்னும் படத்தை ரசிக்க முடிந்திருக்கும்.
நெடுநீர் – பாவ மன்னிப்பு..!