September 16, 2026
  • September 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்
September 19, 2020

36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்

By 0 979 Views

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதே படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஊர்வசி, தீபா, கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் 36 வருடங்களுக்கு பின்னர் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.

பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஊர்வசி நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இணைந்தது குறித்து ட்வீட் செய்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், “‘முந்தானை முடிச்சு’ படத்தில் இணைந்திருப்பது உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மைல் கல் படத்தில் நடிக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார் .

இத்திரைப்படத்தை 2021-ம் ஆண்டு திரைக்குக் கொண்டு வர திட்டமாம்.

முக்கியமா டீச்சர் தீபா வேஷத்துல நடிக்கப் போறது யாருங்க..?