இந்தியாவிலேயே முதல் முறையாக மிஸ்டர் சந்திரமௌலி படத்துக்காக புதிய ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்படுள்ளது. மற்ற திரைப்பட ஆப்களில் உள்ள விளையாட்டுகளைப் போல் அல்லாமல், சந்திரமௌலி படத்தை புரமோட் செய்வதற்காக படத்தைப் பார்த்த டிக்கெட் வைத்தோ, அதன் டிக்கெட்டை வெல்லவோ அல்லாமல் பொது மக்கள் யாரும் விளையாடி இதில் மொபைல் போன் முதல் திரையடங்களின் டிக்கெட் வரையில் நிச்சயப் பரிசுகளைப் பெறலாம்.
இந்த ‘மொபைல் ஆப்’பை மிஸ்டர். சந்திரமௌலி பட நாயகன் கௌதம் கார்த்திக், நாயகி ரெஜினா காசென்ட்ரா, வரலஷ்மி, இயக்குநர் திரு, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டார்கள். இந்த மொபைல் ஆப் பற்றி தனஞ்செயன் கூறியது.
“இந்த ‘மிஸ்டர். சந்திரமௌலி ‘குவிஸ் ஆப்’ விளையாட்டில் உள்ள சிறப்பு அம்சம் ‘லக்கி டிரா’ முறையில் அல்லாமல் விளையாட்டு விதி முறைகளில் விளையாண்டு வென்றால் ஒவ்வொருவருக்கும் நிச்சயமான பரிசுகள் உண்டு. ஆன்டிராய்ட் மற்றும் ஐ போன்களில் டவுன்லோடு செய்ய முடியும் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படம் தொடர்பான பத்து கேள்விகளுக்கும் இரண்டு நிமிடங்களுக்குள் விடையளித்தால் ‘விவோ மொபைல் போன்’, ‘ஃபாஸ்ட் டிராக் வாட்ச்’, ‘டி ஷர்ட்’, சினிமா டிக்கெட் முதலானவற்றை பரிசுகளாகப் பெறலாம்.
இதில் விளையாட கட்டணமோ, படம் பார்த்த டிக்கெட் மற்றும் code எதுவும் தேவையில்லை. டவுன்லோடு செய்து விளையாட வேண்டும் அவ்வளவே. பரிசுப்பொருள்களை நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஏதுவாக தமிழ்நாட்டுவாசிகள் மட்டும்தான் இந்தப் பரிசுப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.
இந்தப் போட்டி இன்றிலிருந்து (26-06-2018) படம் வெளியாகும் தினமான (06-07-2018) வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் ‘வாட்ஸ் ஆப்’ இருக்கும் மொபைல் எண்ணைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பரிசு விவரங்கள் ‘வாட்ஸ் ஆப்’ மூலமே தெரிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட இரண்டு நாள்களில் நேரில் வந்து பரிசுப் பொருள்களைப் பெற்றுச் செல்ல வேண்டும்..!”
இதை உருவாக்கிய மிஸ்டர் சந்திரமௌலி படத் தயாரிப்பாளர்களான போப்டா மீடியா ஒர்க்ஸின் தீர்ப்பே இறுதியானது. இதுபற்றி சந்தேகங்கள், விளக்கங்களுக்கு chandramouliquiz.gmail.com என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.