July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என் பொண்ணுக்கு ஹீரோ கொடுக்கும் லவ் டார்ச்சர் – ஹீரோயின் அம்மா புலம்பல்
July 30, 2019

என் பொண்ணுக்கு ஹீரோ கொடுக்கும் லவ் டார்ச்சர் – ஹீரோயின் அம்மா புலம்பல்

By 0 895 Views
Mayuran Hero

Mayuran Hero

பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனந்த் சாமியும், அஷ்மிதாவும் நாயகன் நாயகியாகியிருக்கிறார்கள்.

 
படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, “கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன்…” என்று கதாநாயகியின் அம்மா புலம்பலுடன் தடை போடுகிறார்.
 
அதற்கு அவர் சொல்லும் காரணம், “என் மகள் கோடீஸ்வரி என்பதால், என் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார் அந்த ஹீரோ. அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள்..!” என்பதுதான்.
 
“கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும்..?” என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார்.
 
இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்.
 
“படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன், கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும்..?” என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு.
 
தயாரிப்பாளர்களுக்கு எப்படியெல்லாம் சோதனை பாருங்கள்..!