April 20, 2025
  • April 20, 2025
Breaking News
July 30, 2019

ஒரே இரவில் வெற்றிபெற்ற மார்க்கெட் ராஜா பாடல்

By 0 645 Views

இயக்குநர் சரணின் திறமை பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தை வடிவமைப்பதிலும், சரியான கலைஞர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் அவரது புத்திசாலித்தனம் அதிக அலங்காரங்களை படத்துக்கு சேர்க்கிறது. இதில் அவர் இப்போது இயக்கி வரும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படமும் இணைகிறது.

ஆரவ்வின் கவர்ச்சிகரமான ஆளுமை, அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. இப்போது அவரது கம்பீரமான குரலை கேட்பது மேலும் படத்துக்கு ஈர்ப்பை சேர்க்கிறது. ராதிகா சரத்குமார் ஒரு தாதாவாக தோன்றுவது மற்றொரு சிறப்பம்சமாகும்.

மேலும் நாசர், காவ்யா தாப்பர், ஆதித்யா, சாம்ஸ், நிகிஷா படேல் மற்றும் பலர் உட்பட அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்பது உறுதி. வெளியான டீசர் படம் குறித்து நல்ல எதிர்பார்ப்புகளை அளித்துள்ள நிலையில், ரோகேஷ் எழுதிய வரிகளுக்கு, சைமன் கே கிங் ஒரு புதிய பரிமாண இசை வகையில் இசையமைத்துள்ள முதல் சிங்கிள் பாடலான ‘தா தா’ பாடல் ஒரே இரவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

சுரபி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கான எஸ்.மோகன் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தை தயாரிக்கிறார். சைமன் கே கிங் இசையமைக்கும் இந்த படத்தில், தனது மூத்த சகோதரர் சரண் உடன் முதன் முறையாக இணைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் கே.வி. குகன்.

பரத்வாஜை ஏன் விட்டுட்டீங்க சரண் சார்..?