January 24, 2026
  • January 24, 2026
Breaking News
May 10, 2021

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக் குறைவு

By 0 656 Views

சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக தன்னுடைய எதிர்மறை செய்திகளை பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். கொரோனா என்னும் நோயே இல்லை என்பது இவர் வாதம்.

இந் நிலையில் அவருக்கு இன்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலில் கொரானா இருக்கிறதா என்று கண்டறியும் சோதனை செய்தார்கள். நல்லவேளையாக அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

பிறகு அவருக்கு நோய் கண்டறியும் சிகிச்சையில் அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.