October 14, 2025
  • October 14, 2025
Breaking News
March 30, 2018

கருணாநிதியை சந்திக்க மம்தா சென்னை வருகிறார்

By 0 1127 Views

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இரண்டுநாள் பயணமாக ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் சென்னை வர இருக்கிறார்..

அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதியையும், செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்த அணியில் இடம்பெறவும் தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மம்தா சென்னை வர இருப்பதும், தி.மு.க. தலைவர்களைச் சந்திக்க இருப்பதும் அவர் மூன்றாவது அணியில் இணைய தி.மு.க.,விற்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது..