March 2, 2026
  • March 2, 2026
Breaking News
November 12, 2019

வைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்

By 0 5789 Views

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பிரபல மலையாளப் பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் ஆவார். அப்பாவைப்போல் ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்டவருக்கு மம்மூட்டியிடமிருந்து நடிகையாக அதிர்ஷ்டம் வந்தது.

ஒரு விளம்பரப்படத்தில் மம்மூட்டி நடிக்க அதை ஒளிப்பதிவு செய்த அப்பாவுக்குத் துணையாகப் போனார் மாளவிகா. அங்கே அவரைப் பார்த்த மம்மூட்டி, “உனக்கு என் மகனுடன் நடிக்க விருப்பமா..?” என்று கேட்டு ‘பட்டம் போலே’ படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாக்கினார்.

பிறகு மலையாளப் படங்கள், கன்னடம் என்று நடித்து வந்தவருக்கு உலகப்புகழ்பெற்ற இயக்குநர் ‘மஜித் மஜிதி’யிடமிருந்து ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு அவர், அங்கே உயர்ந்தது அவரது மதிப்பு.

அதைப்பார்த்து கார்த்திக் சுப்பராஜ் தன் ‘பேட்ட’ படத்தில் வாய்ப்புத்தர, தமிழுக்கு வந்தார். இப்போது ‘விஜய்64’ படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய்க்கே ஜோடியாக்கியதில் தமிழின் முன்னணி நடிகையாகும் வாய்ப்பிலிருக்கிறார்.

ஆனால், கிளாமரில் ஒருபக்கம் பிய்த்து உதறிக்கொண்டிருக்கிறார் மாளவிகா. அவரது கிளாமர் படங்கள் சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இன்று வெளியான அவரது நான்கு படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றுடன் அவரது பிற கிளாமர் பட கேலரி கீழே…

(7)

Image 13 of 21