September 13, 2025
  • September 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மகத் தந்தையானார் – மனைவி பிராச்சிக்கு ஆண் குழந்தை பிறந்தது
June 8, 2021

மகத் தந்தையானார் – மனைவி பிராச்சிக்கு ஆண் குழந்தை பிறந்தது

By 0 465 Views

அஜித்துடன் மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மகத், அதையடுத்து விஜய்யுடன் ஜில்லா, சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிம்புவின் நண்பராகவும் அறியப்பட்டவர் மகத்.

சினிமாவில் கிடைத்த புகழைவிட பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.

இதை அடுத்து இவர் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்து வீட்டில் பிராச்சிக்கு நடந்த வளைகாப்பு விழாவின் வீடியோவை வெளியிட்டார். 
 
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் மகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
 
நாமும் வாழ்த்துவோம்..!