தமிழில் வெளியான ‘ அந்நியன் ‘படத்தை இயக்கிய ஷங்கர் அதே படத்தை இந்தியில் இயக்க விருப்பதாக நேற்றைய தினம் மீடியாக்களில் பரவலாக செய்திகள் வெளிவந்தன.
அந்நியன் படத்தை தயாரித்தது ஆஸ்கார் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம். இந்நிலையில் அந்நியன் ஹிந்தி தயாரிப்பு குறித்து நேற்று வெளிவந்த தகவல்களை பார்த்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று ஷங்கருக்கு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பினார்.
அதில் அந்நியன் படத்தின் கதையை எழுதியவர் எழுத்தாளர் (காலஞ்சென்ற) சுஜாதா. அவரிடம் கதையின் உரிமையை ஆஸ்கர் நிறுவனம் வாங்கி வைத்திருப்பதாகவும், அந்த உரிமையை வேற்று மொழி தயாரிப்புக்கு பயன்படுத்த அனுமதி வாங்காமல் யாரும் அதனை தயாரிக்க முடியாது எனவும் சட்டரீதியாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த நோட்டீஸ் கீழே…
அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஷங்கரிடம் இருந்து ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீஸில் படம் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் படத்தின் கதை என்று தன்னுடைய பெயர்தான் வருகிறது. எனவே அந்தக் கதையை மாற்றவோ திருத்தவோ அதில் வரும் கதாபாத்திரங்களில் உரிமை கொண்டாடவோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. (காலஞ்சென்ற) எழுத்தாளர் சுஜாதாவை வசனம் எழுதுவதற்கு மட்டுமே ஒப்பந்தம் செய்ததாகவும், அதனால் தன்னுடைய கதையை யாரும் உரிமை கோர முடியாது எனவும் ஷங்கர் குறிப்பிட்டிருந்தார்.
ஷங்கர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு அனுப்பிய பதில் நோட்டீஸ் கீழே…