October 30, 2025
  • October 30, 2025
Breaking News
June 25, 2020

அமெரிக்க காதலியை கைப்பிடித்தார் கும்கி அஸ்வின்

By 0 727 Views

பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ள  நகைச்சுவை நடிகர் கும்கி அஸ்வின், விக்ரம் பிரபுவின் கும்கி படத்தில் நடித்து பிரபலமானார்.

Kumki Ashwin Married Vidhya Sri

Kumki Ashwin Married Vidhya Sri

இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் சுவாமிநாதன் மகன் ஆவார். கும்கி அஸ்வினுக்கும் சென்னை கே. கே.நகரை சேர்ந்த ராஜசேகர் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் பணி புரிகிறார். 

இவர்கள் இருவருக்கும் இந்த மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தியை நாம் 20 ஆம் தேதி ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். 

அதன்படி கும்கி அஸ்வின்-வித்யாஸ்ரீ திருமணம் சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நேற்று நடந்தது.

கொரோனா ஊரடங்கினால் அரசு விதிமுறைப்படி சமூக விலகலுடன் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து இந்த திருமணத்தை நடத்தினர்.

ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கும்கி அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாமும் வாழ்த்துவோம்..!