November 25, 2024
  • November 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜனனி ஐயர் சண்டைக்கு பயந்து நாயகி ஆக்கிய இயக்குனர்
February 5, 2022

ஜனனி ஐயர் சண்டைக்கு பயந்து நாயகி ஆக்கிய இயக்குனர்

By 0 262 Views

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்டிக்கும் நிகழ்வினை செய்துகாட்டினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

இப்படம் மூலம் மக்கள் தொடர்பாளர்களாக அறிமுகமாகும் பரணி அழகிரி மற்றும் திருமுருகன் ஆகியோருக்கு மக்கள் தொடர்பாளர் சங்கம் சார்பாக டைமண்ட் பாபு தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த விழாவினில்

நடிகர் பாலசரவணன் பேசியது…

“கூர்மன் தலைப்பே வித்தியாசமானது, இங்கு நடந்த மெண்டலிஸ்ட் நிகழ்வும் வித்தியாசமாக இருந்தது. இதைப்போலவே படத்தின் திரைக்கதையும் உருவாக்கமும் மிக வித்தியாசமாக இருந்தது. இந்த டீமும் வித்தியாசமானவர்கள் தான். இந்தப்படத்தில் இயக்குநரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தில் முதல்முறையாக கொஞ்சம் வயதானவராக வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன்..!”

நடிகர் முருகானந்தம் பேசியதாவது…

கூர்மன் படத்தில் சின்ன கேரக்டர் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனாலும் நடித்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் தான், மதன் மிகவும் நல்ல தயாரிப்பாளர். ஒரு படம் தோற்றால் யாருக்கு வேண்டுமானாஅலும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் ஆனால் தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர் ஜெயிக்க வேண்டும்..!”

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது…

கூர்மன் பிஜு கதை சொன்னபோது அவனிடம் எப்ப வரனும்னு சொல்லு வர்றேன் என்று சொன்னேன், அவனை எனக்கு நன்றாக தெரியும். ஒரு சிறு காட்சிக்கு பின்னால் அடுக்கடுக்காக நிறைய விசயங்கள் வைத்திருந்தார். போலீஸ் வேடம் நிறைய செய்திருந்தாலும் இது வித்தியாசமாக இருந்தது. கூட நடித்தவர்கள் அனைவரும் கேஷுவலாக நடித்தார்கள்..!”

பாடலாசிரியர் உமா தேவி பேசியதாவது…

“கூர்மன் என இலக்கிய விகுதியை, தமிழுக்கு தந்திருக்கும் குழுவிற்கு என் நன்றிகள். இப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பிரிட்டோ சந்தோஷ் நாரயணன் மூலம் அறிமுகமானவர், அவரது இசை கூர்மனில் வரும் இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும். ஆம்பல் பூ எனும் பாடல் திவாகர் வைசாலி பாடியுள்ளார்கள், இன்னொரு பாடல் பிரதீப் பாடியுள்ளார். நாசூக்காக வேலை வாங்குவதில் இந்தக்குழு கில்லாடி..!”

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசியதாவது…

தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பாடல் இசை பற்றி இயக்குநரிடம் கேட்டால் அவர் என்ன நினைக்கிறார் என்பதே தெரியாது,  அவர் உதவியாளர்களிடம் கேட்டால்தான் தெரியும், நான் கொடுத்த முதல் சில டியூன்களே அவர்களுக்கு பிடித்திருந்தது அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இரண்டு பாடல்களுமே உமாதேவி மேடம் கரக்சனே சொல்ல முடியாமல் எழுதி தந்துவிட்டார். இன்னொரு பாடலை பிஜுவே எழுதி விட்டார்..!”

நடிகர் ராஜாஜி பேசியதாவது…

“MK Entertainment  தயாரிப்பாளர் ‘ தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப்பவர் அல்ல. தன்னை சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ நான் நன்றாக இருக்க வேண்டுமென இந்தக்கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது அது இப்போது இல்லை என்பது வருத்தமே.

பிஜு என்னை முதலில் சந்தித்தபோது ஆடிசன் பண்ணலாம் என்றார் ஒண்ணுல்ல,  இத பண்ணா போதும்னு சொல்லியே தலைகீழாக நிற்க வைத்தார், படத்தில் நன்றாக வேலை வாங்கினார். படத்தை அருமையாக எடுத்துள்ளார். இசையமைப்பாளர் டோனிஜி பின்னணி இசையில் கலக்கியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்.

இந்தப்படத்தில் கேரக்டர் ரொம்ப முக்கியம் நரேன் சார் நிறைய சொல்லிக்கொடுத்தார். பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார் என் நெருங்கிய நண்பர். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி..!”

இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் பேசியதாவது….

“ஒரு தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இந்தப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். சினிமாவில் அது அவ்வளவு எளிதாக நடக்காது  அதற்காக மதன் சாருக்கு நன்றி.

நாயகன் ராஜாஜி தலைகீழாக நிற்க வைத்தேன் என்று சொன்னார். ஆனால் நான் என்ன சொன்னாலும் அதை மறுபேச்சில்லாமல் செய்தார். தலைகீழாக நிற்பாரா என நினைத்தேன் ஆனால் நின்று அசத்தி விட்டார். ஜனனி ஐயர் தமிழ் பேசும் நாயகி வேண்டுமென தான் அவரை நடிக்க வைத்தேன். ஒரு நாளில் நான்கைந்து காட்சியெல்லாம் நடித்தார்.

நரேன் சார் எனக்காக நடியுங்கள் என்றேன், உனக்காக நடிக்கிறேன் என நடித்து தந்தார். உமா தேவி மேடம் அட்டகாசமாக பாடல்  எழுதி தந்துள்ளார். பிரிட்டோ அருமையாக இசையை தந்துள்ளார்..!”

நடிகை ஜனனி ஐயர் பேசியதாவது…

“பிரையன் B. ஜார்ஜை  தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன் என்றேன். ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும், ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வை பார்த்திருந்தால் உங்களுக்கே தெரியும்..!”

இப்படத்தின் இசைத்தட்டை நடிகர் நரேன் வெளியிட நடிகை ஜனனி ஐயர் உடன் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.