இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை என்பதால் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமைகள் செயல்பாட்டாளரும் , த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனருமான மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டார்.
” இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.அற்புதமான ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்தத் திரைப்பட விழாவுக்கு என்னை அழைத்த போது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன்.
திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது.
உயிரினம் ஒவ்வொன்றும் சோகத்தை உணர்கிறது, மகிழ்ச்சியை உணர்கிறது, பயத்தை உணர்கிறது, வாழ விரும்புகிறது, அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறது.
இந்தப் படத்தில்நாய்களைப் பற்றிப் பேசுவதால் நாய்களிலிருந்து தொடங்குவோம்.
நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையை விலங்குகளுடன் கழித்து வந்திருக்கிறேன்.
நாய்கள் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், நாய்கள் மட்டுமல்ல. பூனைகள், கோழிகள், பாம்புகள், பன்றிகள், கழுதைகள் இவை அனைத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன .அவை அனைத்தையுமே மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன .ஆனால் நாம்தான் அவைகளைப் புரிந்து கொள்வதில்லை.
நான் உங்களுக்குச் சில சம்பவங்களைக் கூற விரும்புகிறேன். மசூரியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஒரு தொடக்க விழாவுக்கு நான் சென்றிருந்தேன். நான் ஒரு மனிதருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தபோது, விலங்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். அது ஒரு பெரிய சாலை.
அந்த மனிதர், “இந்த முட்டாள்தனத்தை நான் நம்பவில்லை “என்றார்.
மரியா என்று ஒரு பெண்மணி இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தார். அவர் ஒரு புத்தகம் கூட எழுதி இருக்கிறார்.அவரால் விலங்குகளுடன் பேச முடியும், பேச முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும் . இதைச் சொல்வதற்காக இந்தியா வந்திருந்தார்.
நாய் அந்தப் பெண்ணிடம் இன்று காலை, மிஸஸ் காந்தி மருத்துவரிடம், வலி இருப்பதால் அதனால் நிற்க முடியாது ,அதைத் தூங்க வைப்போம் என்றாராம்
அதற்கு டாக்டர், முடியாது என்றாராம்.இதையெல்லாம் அந்த நாயிடமிருந்து புரிந்து கொண்டு அவர் கூறினார்.
நான் முதல் முதலில் தேர்தலில் நின்ற போது, நான் ஒரு கூட்டத்திற்குச் சென்றேன்.,அங்கே ஒரு மோசமான வாசனை வந்தது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. ஏதேனும் ரசாயனங்கள் உள்ளதா, கழிவுநீர் உள்ளதா, வேறு ஏதாவது இருக்கிறதா என்று நான் தேடிக்கொண்டிருந்தேன். மேடையின் அருகே ஒரு கழுதை நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
விலங்குகளின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பார்க்கும் போது , அது நம்முடையதாக உணர வேண்டும்.நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான் இந்தப் படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது.
ஒருமுறை நான் எனது தொகுதியில் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய நீண்ட கறுப்பு பாம்பு கடந்து கொண்டிருந்தது. நாங்கள் பயணத்தைத் தொடராமல் நிறுத்தி, காத்திருந்தோம், பாம்பு கடந்து சென்றது. பாம்புகளால் நன்றாகப் பார்க்க முடியாது. அவற்றால் கேட்கவே முடியாது. ஒரு இரவில், நான் தூங்கச் சென்றபோது, ஒரு பாம்பு வந்து என் படுக்கையின் கீழ் இரவு முழுவதும் இருந்து விட்டு காலையில் போய்விட்டது. அது உங்களைப் போலவே தூங்க வந்ததைப் போல இருந்தது. இப்படி என் வாழ்க்கையில் நிறைய உண்டு.
நீங்கள், நான், அது, உங்கள் காலடியில் செல்லும் எறும்பு ஆகியவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
கோழிகளுக்கு ஒரு முழுமையான அகராதி உண்டு.அவற்றுக்கான, ஒரு மொழி உள்ளது. கோழிகள், திருமணம் செய்து கொள்கின்றன.பிள்ளைகள் குடும்பம் என்று ஒன்று உண்டு.ஆண் கோழிகளுக்கு மனைவியைப் போல பெண் தோழிகளும் உண்டு.மனைவிக்கும் பெண் தோழிக்கும் சண்டை வருவதுண்டு. பொய்கள் சொல்வதும் உண்டு.
இந்தப் படம் நாயின் உரிமை வழக்கு பற்றிப் பேசுகிறது.
நான் எப்போதும் பார்க்கிற குழந்தைகளிடம் சொல்வது போல் உங்களுக்கும் சொல்கிறேன்.மும்பையில் ஒவ்வொரு நாளும் நாய்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதை யாரும் நிறுத்த முடியாது.சாலைகளில் அவற்றின் மீது வாகனங்கள் மோதி பல நாய்கள் காயம்படுகின்றன, பலவும் இறக்கின்றன.
நான் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இதுபோல ஏராளமான விலங்குகளுக்கு எதிரான தாக்குதல் பிரச்சினைகள் வருகின்றன.
இந்தப் படம் அந்த நீதிபதிக்கு மட்டும் காட்டப்படாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அனைத்து நீதிபதிகளுக்கும் காட்டப்பட வேண்டும்.
எஸ். ஏ. சந்திரசேகரன் இந்தப் படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விலங்கு நல இயக்க மக்களையும் இதைப் பார்க்கச் சொல்கிறேன். அவர்களை விட நாம் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பார்க்க வேண்டும்.
உயிரினங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். விலங்குகள் மீது போர் தொடுப்பதை நிறுத்தும் வரை, நமக்குள் அமைதி இருக்காது. அனைத்து உயிரினங்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. இது ஒரு பிரச்சார படம் அல்ல ,கலகலப்பான படம். மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம் .இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு முக்கியமான யோசனை. இந்த அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.
இந்தப் பட விழாவில் இயக்குநர்கள் எஸ் .ஏ. சந்திரசேகரன், திருமதி ஷோபா சந்திரசேகரன்,எம். ராஜேஷ் பொன்ராம், நடிகர்கள் ஒய். ஜி. மகேந்திரன், விஜய் ஆண்டனி,தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, விமலா பிரிட்டோ ,இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , தொழிலதிபர் சுந்தர்,
தயாரிப்பாளர் விக்கி,படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தில் பிரதான வேடம் ஏற்றுள்ள நாய் ஜான்சியும் கலந்து கொண்டது.
“இந்தப் படத்தில் நடித்ததைத் தவிர எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
இங்கே வந்திருக்கிற ராஜேஷ், பொன்ராம் இவர்களெல்லாம் எனக்குப் பிள்ளைகள் மாதிரி. இங்கே சேவியர் பிரிட்டோ வந்திருக்கிறார் . அவர் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர், மாதத்தின் 30 நாட்களில் 25 நாட்கள் உலகம் சுற்றிக் கொண்டிருப்பவர். அவர் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்.
என் மனைவி ஒரு நல்ல விமர்சகர்.யாராவது படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் பார்ப்பார். படம் பிடித்திருந்தால் மறுமுறை பார்ப்பார். மிகவும் பிடித்திருந்தால் தான் மூன்றாவது முறை பார்ப்பார். அவர் இந்த கூரன் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறார். அதிலிருந்து இந்தப் படத்தின் வெற்றியை அறிய முடியும்.நான் எண்பதுகளில் இருந்து படம் இயக்கி வருகிறேன். எனது ஒவ்வொரு படத்திலும் கதாநாயகன் இருக்கிறாரோ இல்லையோ ஒய்.ஜி.மகேந்திரன் இருப்பார்.இந்தப் படத்திலும் அவர் இருக்கிறார்.நான் இயக்கிய படத்தில் நடித்த அவர், என்னுடன் சேர்ந்து இதில் நடித்துள்ளார்.
இங்கே வந்திருக்கிற விஜய் ஆண்டனியை நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கிறேன். நம்பிக்கையின் இன்னொரு உருவம் தான் விஜய் ஆண்டனி .எப்போதும் நேர் நிலையாகச் சிந்திப்பவர் எதிர்மறையாக ஒரு வார்த்தை கூட அவரிடம் வராது. எத்தனை முறை தடுக்கி விழுந்தாலும் எழுந்து நிற்பவர்.
இது ஒரு சிறிய பட்ஜெட் படம் தான் என்றாலும் இதை விளம்பரப்படுத்துவதற்கு இங்கே நமது சிறப்பு விருந்தினர் மேனகா காந்தி அவர்கள் வந்திருக்கிறார். அவர்களை ஏன் அழைத்திருக்கிறோம்? அவர் பெரிய பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலா? அவர் அரசியலில் செல்வாக்கு உள்ளவர் என்பதாலா? அவர் பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக இருந்தவர் என்பதாலா? அதையெல்லாம் தாண்டி மனிதநேயம் மிக்கவர், கருணை உள்ளம் கொண்டவர்,
அந்த எளிமையைக் கண்டு நான் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை. இந்த இயக்குநர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. இப்போது உள்ள இளைஞர்கள் புதிதாகச் சிந்திக்கிறார்கள்.
என்னை இந்தப் படத்தில் ஒரு நாயுடன் நடிக்க வைத்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு எனது தங்கை மகள் விமலா பிரிட்டோ மாமா நீங்களா நாயுடன் நடிதீர்கள்?உங்களுக்கு நாய் என்றாலே ஒத்துக் கொள்ளாதே எப்படி நடித்தீர்கள்? என்று ஆச்சரியப்பட்டார்.இந்தப் படம் நிச்சயமாக இதுவரை யாரும் பார்த்திருக்காத ஒரு படமாக இருக்கும்” என்றார்.