November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் அஜித் சூர்யாவை கொண்டாடும் கேரளா – ஆர்கே சுரேஷ்
May 16, 2019

விஜய் அஜித் சூர்யாவை கொண்டாடும் கேரளா – ஆர்கே சுரேஷ்

By 0 762 Views

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்
தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம்
மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர்
மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகன் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா
சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர்
அப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர்
ரிஜேஷ் பாஸ்கர், இசையமைப்பாளர் சிவ சுகுமாரன் உள்ளிட்ட படக்குழுவினர்
கலந்துகொண்டனர். இயக்குநரும், நாயகன் ஆர்.கே.சுரேஷும் பேசியதிலிருந்து…

இயக்குநர் மஞ்சித் திவாகர் –

 

“இந்தப் படத்தின் கதையை நான்காண்டுகளுக்கு முன்
கதாசிரியர் ரிஜேஷ் கொச்சியில் சந்தித்து என்னிடம் சொன்னார். அப்போது
சென்னை அம்பத்தூரில் 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம்
பற்றிக் கூறினார். அதை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதையை நாங்கள்
உருவாக்கியிருக்கிறோம்.

‘ஷிகாரி சம்பவம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் ஆர். கே. சுரேஷின்
நடிப்பைப் பார்த்து தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன். அற்புதமான
திறமை கொண்ட நடிகர். அவர் நடித்த பிறகு தான் இந்த படத்தின் தோற்றமே
மாறிவிட்டது. 

இந்தப் படத்தின் கதை கொச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கிற கதை.
இதில் நாயகி, தன்னுடைய சொந்த பணிக்காக சென்னைக்கு வருகை தருகிறார். அவர்
வரும் போது சந்திக்கும் சம்பவங்களும், அதன் விளைவுகளும் தான் திரைக்கதை.
பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இந்த படத்தின் திரைக்கதைக்கும் எந்த
தொடர்பும் இல்லை. 

RK Suresh

RK Suresh

நடிகர் ஆர் கே சுரேஷ் –

“கொச்சின் ஷாதி அட் சென்னை03 என்கிற மலையாளப்படத்தில் நடிக்கத்தான் நான்
முதலில் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை முடித்துவிட்டு டப்பிங்கில்
பார்க்கும் போது, இயக்குநரிடம், ‘இதில் எழுபது சதம் தமிழ் இருக்கிறது.
முப்பது சதம் தான் மலையாளம் இருக்கிறது.’ என்றேன். அதனால் இதனை தமிழ் ரசிகர்களிடத்திலும் கொண்டு
போய் சேர்க்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு இதனை
தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

இந்தப் படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படபிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே
நான் என்னுடைய சொந்த பணத்தை ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன்.

 

ஆனால் அவர்கள் முதலில் வாங்க மறுத்தார்கள். நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும்,
உங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று
மாநிலத்தவன் அல்ல. சினிமாவின் நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம்
கிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு அவர்கள்
வாங்கிக் கொண்டார்கள்.

 

இந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும்
நெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து
மூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்னுடைய நிறுவனத்தில்
முதலீடுசெய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக்
கடமைப்பட்டிருக்கிறேன்.

மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்கு உள்ள வரவேற்பு, தமிழ்
நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள்
கொண்டாடுகிறார்கள்..!”

Kochin Shadhi at Chennai 03 Audio Launch

Kochin Shadhi at Chennai 03 Audio Launch