November 24, 2024
  • November 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – சுசீந்திரன்
July 27, 2019

கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – சுசீந்திரன்

By 0 766 Views

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, எம்.சசிகுமார் நடித்திருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை (27-07-2019) நடைபெற்றது. அதில் இயக்குநர் சுசீந்திரன், சசிகுமார், பாரதிராஜா பேசியதிலிருந்து…

சுசீந்திரன் –

“நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்றுதான் ‘வெண்ணிலா கபடி குழு’ எடுத்தேன்.

இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் அவரிடம் வசனங்களைக் கொடுத்து விடுவேன். அதை ஒரே முறையில் பேசி நடித்து விடுவார். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சசிகுமாரிமிருந்து 9 புது இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பது பெருமை.

உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கிறது. நாங்கள் நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம். ஆகஸ்ட் 15 இந்தப்படம் வெளியாகிறது. இது எங்களுடைய குடும்பப் படமாக இருந்தாலும் என் தம்பி தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப்படத்தில் மதுரை பெண் மீனாட்சி நாயகியாக அறிமுகமாகிறார்..!”

சசிகுமார் –

“கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள்தான். கபடி பயிற்சியாளர் செல்வமாகதான் நான் நடித்திருக்கிறேன். ‘நல்லுச்சாமி’யாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்றுதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இசை இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்..!”

பாரதிராஜா –

“வளர்கின்ற நல்ல கலைஞர்களை ஊக்கப்படுத்தவில்லையென்றால் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இந்தப்படத்தில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் இப்படத்தில் நடித்ததாகவே தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்தப் பெண்களுக்கு நன்றி கூற வேண்டும்.

சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுச்சாமி கொடுத்து வைத்தவர். அம்பானிபோல் வசதியாக வாழ விருப்பமில்லை.எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன். இது சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை. அதில் பெரும்பங்கு நல்லுச்சாமிக்கு இருக்கிறது. இப்படத்தில் நல்லுச்சாமியாகத்தான் நான் நடித்திருக்கிறேன்.

சசிகுமாரைப் பார்க்கும்போது அவர் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவருடைய முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போதுதான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது.

நானும் இமானும் ஒரு படத்திற்கு இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அப்படம் நின்று விட்டது. அவர் உடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார்..!”

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் பாரதிராஜா கபடி வீராங்களைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.