இதயத்தசை பாதிப்பிற்கான (Hypertrophic Cardiomyopathy Clinic) அனைத்து சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் காவேரி மருத்துவமனை, வடபழனி அறிமுகப்படுத்துகிறது..!
சென்னை, 23 ஜூலை 2025: உயர்த்தர சிகிச்சையில் சென்னையின் முக்கிய மையமான காவேரி மருத்துவமனை,வடபழனி, மிகை வளர்ச்சியுள்ள இதயத்தசை பாதிப்புக்கான (HCM) கிளினிக் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது. அதிக சிக்கலான இந்த இதய பாதிப்புக்கு சிகிச்சையளிக்க ஒரு முழுமையான அணுகுமுறையை மக்களுக்கு வழங்குவதே இந்த கிளினிக் தொடங்கப்படுவதன் நோக்கமாகும்.
இப்பாதிப்புக்கான நோயறிதல் மற்றும் சிகிச்சை வழிமுறைகளின் தொகுப்பை இந்த கிளினிக் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து வழங்குகிறது. பெரும்பாலான நேரங்களில் இந்த வழிமுறைகளுள் பல, வெவ்வேறு மருத்துவ மையங்களில் தனித்தனியாக தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் மக்கள் எளிதாகப் பெறுவதை இந்த கிளினிக் சாத்தியமாக்கும்.
இதயத்தசை பாதிப்பு (ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி) என்பது இதய தசைகள் வழக்கத்திற்கும் மேல் தடிமனாக ஆகின்றன. இது பெரும்பாலும் மரபணு காரணமாக ஏற்படுகிறது. இதயத் தசைகள் தடிமனாக மாற்றம் அடைவதால், இதயம் ரத்தத்தை சரியாக இயக்க முடியாமல் போகிறது.
இதன் காரணமாக மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம், களைப்பு, மயக்கமடைதல் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். சில நேரங்களில், குறிப்பாக இளவயது நபர்களில் இதய செயலிழப்பால் திடீர் உயிரிழப்பும் ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் மற்றும் சிறப்பான சிகிச்சையை மேற்கொள்வது, நீண்டகால விளைவுகளை தவிர்க்கக்கூடும்.
இது தொடர்பான சேவைகளின் முழு தொகுப்பையும் வழங்கக்கூடிய ஒரு சிறந்த மையமாக HCM கிளினிக் இயங்கும்; சிறப்பான மரபணு பரிசோதனையிலிருந்து (PGT-M) மரபியல் ஆலோசனை மற்றும் இதயமரபியலில் குடும்ப உறுப்பினர்களுக்கான ஸ்கிரீனிங் நடவடிக்கைகள் வரை, நோயறிதல்களிலிருந்து மேம்பட்ட எக்கோ மற்றும் MRI சோதனைகள், வழக்கமான நோயறிதல் செயல்பாடுகளுக்கான கேத்-இலிருந்து, ஆல்கஹால் செப்டல் அப்லேஷன் (ASA) மற்றும் சமீபத்திய SESAME தொழில்நுட்பம் வரை, ஹோல்டர் மூலம் தொடர்ச்சியான மின் செயல்பாடு கண்காணிப்பிலிருந்து மிக நவீன மின்இயங்கியல் ஆய்வுகள் வரை பேஸ்மேக்கர் மற்றும் ICD-கள் போன்ற கருவிகள், இடைச்சுவர் தசைப்பகுதி நீக்கத்திலிருந்து இதயத்தின் ஈரிதழ் வால்வு பழுது நீக்கல் வரை முழுமையான சிகிச்சை வழிமுறைகளும், உத்திகளும் இந்த கிளினிக்கில் மேற்கொள்ளப்படும்.
நோயின் தீவிர நிலையை நோயாளி எட்டும்போது, ஒரு கடுமையான சூழலில் இதயமாற்று சிகிச்சைக்கான மதிப்பாய்வு அந்நபருக்கு தேவைப்படலாம். மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து சிகிச்சை வழிமுறைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் உத்தரவாதத்தை காவேரி மருத்துவமனை வடபழனி வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட சிகிச்சை நோக்கத்துடனும் மற்றும் குறைந்த செலவிலான சிகிச்சையை பெறவும் இந்த மையம் உதவுகிறது.
காவேரி மருத்துவமனை, இதய செயல்பாட்டு முடக்கம் & மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் தலைவரும் முதுநிலை இதய ஊடுருவல் அறுவை சிகிச்சை வல்லுநருமான பேராசிரியர் டாக்டர் பி.மனோகர், இப்புதிய முன்னெடுப்பு குறித்து பேசுகையில், “HCM என்பது ஒரு அளவு அனைவருக்கும் பொருந்தும் என்ற அணுகுமுறை கொண்டதல்ல. ஒவ்வொரு நோயாளியும் மாறுபட்ட பாதிப்புகளையும், அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதால் அவர்களுக்கான சிகிச்சை அதற்கேற்ப வழங்க வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை அடையாளம் காண்பது, அதுவும் குறிப்பாக, இப்பாதிப்பு மரபு ரீதியாக ஏற்கனவே இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்; சீரமைக்கப்பட்டு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மருத்துவம், செயல்முறை மற்றும் அறுவைசிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகளை இங்கு நாங்கள் வழங்குகிறோம்” என்று கூறினார்.
இதயவியல் பிரிவின் கிளினிக்கல் லீடு மற்றும் மூத்த ஆலோசகர்- கார்டியோவாஸ்குலர் & தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அன்பரசு மோகன்ராஜ் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: “இதய இடைச்சுவர் தசைப்பகுதி நீக்கம் மற்றும் ஈரிதழ் வால்வு செயல்முறைகள் போன்ற இடையீட்டு அறுவைசிகிச்சைகள், மருந்துகள் அல்லது பிற சிகிச்சைகளுக்கு நன்றாக பலனளிக்காத பட்சத்தில் அடைப்புள்ள HCM நோயாளிகளுக்கு வாழ்க்கையையே மாற்றியமைப்பதாக இருக்கும். எமது HCM கிளினிக்கில் பல்வேறு துறைகள்/பிரிவுகள் சார்ந்த கண்ணோட்டத்தின் வழியாக ஒவ்வொரு நோயாளிக்கான பாதிப்பையும் நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம்;
அந்த நபரின் நீண்டகால நோய்த் தாக்கக் கணிப்புக்கு இணக்கமானதாக அறுவைசிகிச்சைக்கான முடிவுகள் துல்லியமாக இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் பல மருத்துவ அமைவிடங்களில் இதய சிகிச்சைக்கு பல நிபுணர்கள் உள்ளடங்கிய குழு அணுகுமுறை என்பது குறைவாகவே இருக்கிறது. ஆனால் இத்தகைய குழு அணுகுமுறை மீது தான் இந்த HCM கிளினிக்கில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இத்துறையில் மிகச்சிறந்த நிபுணர்களால் எமது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை வழங்கப்படுவதற்காக இந்நோயை பல்வேறு மருத்துவ நிபுணர்கள் உள்ளடங்கிய ஒரு குழு அடிப்படையிலான அணுகுமுறையை வடபழனி காவேரி மருத்துவமனையில் செயல்படும் இதய சிகிச்சை குழு மேற்கொள்கிறது. இது தொடர்பான அனைத்து சிகிச்சை முறைகளும் ஒரு அமைவிடத்தில் இங்கு கிடைப்பது இதன் தனித்துவ அம்சமாகும்.
காவேரி குழும மருத்துவமனைகளின் இணை-நிறுவனரும் மற்றும் செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “வெவ்வேறு துறைகளில் அல்லது வேறுபட்ட பல மருத்துவமனைகளில் கிடைக்கும் HCM சிகிச்சையின் அனைத்து வழிமுறைகளையும் இந்த கிளினிக் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து வழங்குகிறது. மருத்துவர்கள் கலந்தாலோசனை முதல் மேம்பட்ட மருத்துவச் செயல்முறைகள் வரை தாமதமின்றி பரிந்துரைத்து, அவர்களுக்கு தேவைப்படுகிற அனைத்து சிகிச்சை வழிமுறைகளையும், நோயாளிகளும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பெறுவதை மிகவும் எளிதாக மாற்றுவதே எமது நோக்கமாகும். இத்தகைய அணுகுமுறையானது நோயறிதலை மேம்படுத்தி, நோய் ஏற்படும் வாய்ப்பை குறைத்து, இப்பாதிப்போடு வாழ்கிற மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுமென்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இதயவியல், மின் இயற்பியல், மரபியல், உளவியல் மற்றும் இதய அறுவைசிகிச்சை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்திருக்கிற வடபழனி, காவேரி மருத்துவமனையின் HCM கிளினிக், இந்த சவாலான நோய் பாதிப்புள்ள நபர்களுக்கு சிறப்பான தீர்வு வழங்குவதில் புதிய வழிமுறையை நிறுவியிருக்கிறது. குறிப்பாக, வெவ்வேறு துறைகளை சார்ந்த சிகிச்சை தேவைப்படக்கூடிய நோயாளிகளுக்கு, அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே இடத்தில பயனளிப்பதாக HCM கிளினிக் நிச்சயம் இருக்கும்.