August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நயன்தாரா சமந்தாவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் தொடங்கியது
December 10, 2020

நயன்தாரா சமந்தாவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் தொடங்கியது

By 0 760 Views

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது.

படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம்.

இளைஞர்களை ஈர்க்கும் பக்கா எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாக்களைத் தரும் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். மேலும் படத்தின் வெற்றிக்கு இப்பவே உத்திரவாதம் தருவது போல படத்தின் இசைப் பணியை அனிருத் துவங்கியிருக்கிறார்.

பெரிய பட்ஜெட்டில் ஸ்ட்ராங்க் எண்டெர்மெயிண்ட் விசயங்களோடு தயாராகும் இப்படம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.