October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய கருணாஸ் கோரிக்கை
February 20, 2020

இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய கருணாஸ் கோரிக்கை

By 0 1274 Views
Karunas Cmplaints on Mari selvaraj

Karunas 

கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படங்களில் சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து தூண்டி வரும் மாரிசெல்வராஜைக் கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதிலிருந்து…

“1991 இல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அமைதி சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இது போன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்த திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல் நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இது போன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்..!”

இது தொடர்பாக புகார் மனுக்களையும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார்களாம்.