January 12, 2026
  • January 12, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் ரசிகர்களுடன் மோதல் – காமெடி கருணாகரன் போலீஸ் கமிஷனரிடம் புகார்
October 8, 2018

விஜய் ரசிகர்களுடன் மோதல் – காமெடி கருணாகரன் போலீஸ் கமிஷனரிடம் புகார்

By 0 1149 Views

‘சர்கார்’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய பேசியதைக் கமெண்ட் செய்த காமெடி நடிகர் கருணாகரனை பிடி பிடியென்று விஜய் ரசிகர்கள் பிடித்து விட, பதிலுக்கு கருணாகரனும் அவர்களுடன் மல்லுக்கட்ட கடந்த நாள்களாக ட்விட்டரில் ஆவி பறக்கும் செய்தி இதுவாகத்தான் இருக்கிறது.

ஆனால், இது சர்கார் பாடல் வெளியீட்டுடன் தொடங்கிய பிரச்சினை இல்லை. மார்ச் மாதம் சினிமா ஸ்டிரைக் நடந்தபோது சிறப்பு அனுமதி பெற்று சர்கார் ஷூட்டிங் நடந்தபோதே அதை விமர்சித்து கருணாகரன் பிரச்சினையைத் தொடங்கியிருந்தார். அதன் தொடர்ச்சிதான் இது.

தொடர்ந்த பிரச்சினைகளில் ஒரு கட்டத்தில் ‘கருணாகரன் தமிழ்நாட்டு நடிகரில்லை…’ என்று அவரது அடிமடியில் விஜய் ரசிகர்கள் கைவைக்க “சர்கார்’ தமிழ்த் தலைப்பா என்று நான் கேட்டேனா..?” என்றார் கருணாகரன். ஒருகட்டத்தில் இந்தப்பிரச்சினைகளை கருணாகரன் விஜய்யின் அதிகாரபூர்வ அலுவலக கணக்கை ‘டேக்’ பண்ண இன்னும் பிரச்சினை அதிகமானது.

இதைத் தொடர்ந்து விஜய் வந்து பிரச்சினையைத் தீர்ப்பார் என்று பார்த்தால் அது முடிவதாகத் தெரியவில்லை. எனவே, இன்று பகலில் தன்னைத் தரக்குறைவாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்களின் மேல் புகார் ஒன்றை போலீஸ் கமிஷனர் அலுவகம் சென்று கருணாகரன் அளிக்கவிருப்பதாகத் தெரிகிறது.

இத்துடனாவது பிரச்சினை ஓய்ந்தால் சரி..!