October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கார்த்தி படப்பிடிப்பில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
September 25, 2019

கார்த்தி படப்பிடிப்பில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

By 0 1014 Views

தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ மூலம் திரையைக் காணவிருக்கும் கார்த்தி அடுத்து நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கார்த்தி 19’ என்று பெயரிட்டிருந்தார்கள்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப்படத்துக்கு இப்போது ‘சுல்தான்’ என்று பெயரிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதில் கார்த்தி ஜோடியாக டோலிவுட் வரவு ‘ராஷ்மிகா மன்டன்னா’ நடிக்கிறார்.

அத்துடன் இது திப்பு சுல்தான் பற்றிய கதை என்றும் தகவல்கள் பரவ, இந்தக் காரணம் போதாதா ஆர்ப்பாட்டம் செய்ய..?

இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெறுவதை அறிந்த பா.ஜ.க. – இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களுடன் மலைக் கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மலைக்கோட்டையிலிருந்து குழுவினர் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இந்து அமைப்பினர் கலைந்து சென்றதால் அப்பகுதியில் நிலவிய பதட்டம் தணிந்தது.

இது பற்றிய விளக்கத்தை படக்குழுதான் அறிவிக்க வேண்டும். அத்துடன் இது திப்பு சுல்தான் கதையாக இருக்கும் பட்சத்தில் பட வெளியீடு வரை போராட்டத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.