November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆக நடிக்கும் ஜீவா
January 12, 2020

தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆக நடிக்கும் ஜீவா

By 0 952 Views
கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பாத்திரமேற்கும் ’83’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
 
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைப் பெற்று வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த தலைப்பு வைக்கட்டுள்ளது.
 
கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இந்தியா உலககோப்பை வென்ற கதையை சொல்லும் ’83’ படத்தில் இப்போது அடுத்த சுவாரஸ்யமாக தமிழக வீரர் ‘கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தா’க அவதாரமெடுத்துள்ளார் நடிகர் ஜீவா.
 
நடிகர் ஜீவாவைத் தேர்ந்தெடுத்ததைப் பற்றி படத்தின் இயக்குநர் கபீர்கான் கூறியதாவது “இந்தப்படத்திற்காக கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தை பற்றி யோசித்தபோது அவரது துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் தான் மனதின் முன் வந்து நின்றது. அவர் தனி ஒரு பேட்டிங் ஸ்டைல் கொண்டிருந்தாலும், அவரது விளையாட்டையும் தாண்டி அவரது சுறுசுறுப்பான குணம் அவரை எல்லோரிடத்திலும் பிரபலமாக வைத்திருந்தது.
 
1983 உலககோப்பையை மையமாக வைத்து படத்தை உருவாக்க ஆரம்பித்த போது அணியில் பங்கு பெற்ற ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருந்தோம். கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கேரக்டரை செய்வதற்கு அவரைப்போலவே சுறுசுறுப்பும் திறமையும் நிறைந்த ஒருவரை தேடினோம்.
 
ஜீவாவின் சில படங்களை பார்த்தபோது இவர்தான் பொருத்தமானவர் என மொத்தக்குழுவும் சேர்ந்து முடிவு செய்தோம். அனைவரையும் கவர்ந்தவராக ஜீவா இருந்தார். என்ன தான் தானும் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தாலும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் அவர்களது பேட்டிங் ஸ்டைலை தன்னுள் கொண்டு வர, ஜீவா நிறைய பயிற்சி மேற்கொண்டார்…”  
 
Jiiva plays as Krishnamachari Srikkanthஸ்ரீகாந்தாக நடிக்கும் ஜீவா என்ன சொல்கிறார்..?
 
“கிரிக்கெட் சிறுவயது முதலே எனக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு. 1983 படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கதாபாத்திரம் என்னைத் தேடி வந்த போது நான் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனேன். 
 
கிரிக்கெட்டை தமிழக வீதிகள் தோறும் அறிமுகப்படுத்திய கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் அவர்களின் பாத்திரத்தை ஏற்று நடிப்பது என்  வாழ்வின் வரம். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கபீர்கான் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரும் நன்றி. மேலும் இதற்கு தயாராவதற்கு நிறைய அவகாசம் தந்து, என்னை சரியாக நடிக்க வைத்துள்ளார்கள்.
 
இந்தியாவின் மிகத் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்குடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். ரசிகர்கள் இப்படத்தை எப்படி  வரவேற்பார்கள் என்பதை பார்க்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.
 
83 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலககோப்பையை வென்ற போட்டியை பார்த்தவர்களுக்கு இப்படம் பல மலரும் நினைவுகளை உண்டாக்கும். அந்த காலகட்டத்தில் அதனை பார்த்து ரசிக்காதவர்களுக்கு இப்படம் தத்ரூபமாக அவர்கள் கண்முன் அந்த தருணத்தை கொண்டு வரும்..!” என்று சிலாகிக்கிறார் ஜீவா.
 
’83’ திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் 2020 ஏப்ரல் 20 அன்று வெளியாகிறது.