2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள்
வங்கியின் உலகளாவிய பிசினஸ், முந்தைய ஆண்டைவிட 8% உயர்ந்து ₹12.61 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது
• நிகர இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹2119 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹2852 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 35% வளர்ச்சி கண்டிருக்கிறது
• செயல்பாட்டு இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹4097 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹4749 கோடியாக 16% அதிகரித்திருக்கிறது
• நிகர வட்டி வருவாய், டிசம்பர்’23-ல் பதிவான ₹5815 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹6415 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 10% அதிகரித்திருக்கிறது
• கட்டணம் சார்ந்த வருவாய், டிசம்பர்’23-ல் பதிவான ₹852 கோடி என்பதிலிருந்து 9% வளர்ச்சி கண்டு டிசம்பர்’24-ல் ₹931 கோடியாக உயர்ந்திருக்கிறது
• சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), டிசம்பர்’23-ல் இருந்த 1.11% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 28 bps உயர்ந்து 1.39% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), டிசம்பர்’23-ல் இருந்த 19.92% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 108 bps மேம்பட்டு 21.00% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• கடன்கள் மீதான வருவாய் (YoA), டிசம்பர்’23-ல் இருந்த 8.78% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 14 bps உயர்ந்து 8.92% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• முதலீடுகள் மீதான வருவாய் (YoI), டிசம்பர்’23-ல் இருந்த 6.80% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 32 bps உயர்ந்து 7.12% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• வருவாய்க்கான செலவு விகிதம் டிசம்பர்’23-ல் 46.90% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 234 bps குறைந்து 44.56% ஆக பதிவாகியிருக்கிறது
• மொத்த கடன்கள், டிசம்பர்’23-ல் பதிவான ₹509800 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 10% வளர்ச்சி பெற்று ₹559199 கோடியாக அதிகரித்திருக்கிறது
• RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் டிசம்பர்’23-ல் இருந்த ₹296845 கோடி என்ற அளவிலிருந்து டிசம்பர்’24-ல் ₹334739 கோடியாக உயர்ந்து 13% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
• மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 64.35% ஆக இருக்கிறது. ரீடெய்ல், விவசாயம், MSME (RAM) ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 16%, 13.5% மற்றும் 8% என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 12% அதிகரித்திருக்கிறது.
• முன்னுரிமை துறைக்கான கடன் வழங்கல் டிசம்பர்’24-ல் ஒழுங்குமுறை தேவைப்பாடான 40%-க்கு எதிராக ANBC-யின் ஒரு சதவீதமாக 43.85% (₹192761 கோடி) ஆக பதிவாகியிருக்கிறது
• மொத்த டெபாசிட்கள் டிசம்பர்’23-ல் பதிவான ₹654154 கோடிக்கு மாறாக 7% வளர்ச்சி கண்டு டிசம்பர்’24-ல் ₹702282 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு, சேமிப்பு & CASA டெபாசிட்டுகள் முறையே 5%, 3.5% மற்றும் 4% என அதிகரித்திருக்கின்றன
• உள்நாட்டு CASA விகிதம் 40% என 31 டிசம்பர் 24-ல் பதிவாகியிருக்கிறது
• 31 டிசம்பர் 24-ல் CD விகிதம் 79.63% ஆக இருக்கிறது
• GNPA (மொத்த வாராக்கடன்கள்) டிசம்பர்’23-ல் இருந்த 4.47% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 121 bps குறைந்து 3.26% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) டிசம்பர்’23-ல் இருந்த 0.53% லிருந்து டிசம்பர்’24-ல் 32 bps குறைந்து 0.21% ஆக பதிவாகியிருக்கிறது
• வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), டிசம்பர்’23-ல் பதிவான 95.90% என்பதிலிருந்து 219 bps அதிகரித்து டிசம்பர்’24-ல் 98.09% ஆக பதிவாகியிருக்கிறது
• நழுவல் விகிதம், டிசம்பர்’23-ல் 1.28% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 50 bps முன்னேற்றம் கண்டு 0.78% ஆக இருக்கிறது
• மூலதன போதுமான நிலை விகிதம் 34 bps முன்னேற்றம் கண்டு 15.92% ஆக உயர்ந்திருக்கிறது மற்றும் CET-I, முந்தைய ஆண்டைவிட 91 bps உயர்ந்து 13.27% ஆக பதிவாகியிருக்கிறது மற்றும் அடுக்கு I மூலதனம் 89 bps வளர்ச்சி கண்டு 13.77% பதிவாகியிருக்கிறது
• ஒரு பங்கிற்கான வருவாய் (EPS) டிசம்பர்’23-ல் பதிவான ₹67.12 என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 26% அதிகரித்து ₹84.70 ஆக பதிவாகியிருக்கிறது
• நிகர இலாபம், செப்டம்பர்’24-ல் பதிவான ₹2707 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹2852 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 5% வளர்ச்சி கண்டிருக்கிறது
• சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), செப்டம்பர்’24-ல் இருந்த 1.33% என்பதிலிருந்து 6 bps உயர்ந்து டிசம்பர்’24-ல் 1.39% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• கடன்கள் மீதான வருவாய் (YoA), செப்டம்பர்’24-ல் இருந்த 8.77% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 15 bps உயர்ந்து 8.92% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• உள்நாட்டளவில் நிகர வட்டி விளிம்பு (NIM), செப்டம்பர்’24-ல் பதிவான 3.49% லிருந்து 8 bps உயர்ந்து டிசம்பர்’24-ல் 3.57% ஆக பதிவாகியிருக்கிறது
• GNPA (மொத்த வாராக்கடன்கள்) செப்டம்பர்’24-ல் 3.48% லிருந்து 22 bps குறைந்து டிசம்பர்’24-ல் 3.26% ஆக பதிவாகியிருக்கிறது, NNPA (நிகர வாராக்கடன்கள்) செப்டம்பர்’24-ல் பதிவான 0.27% லிருந்து டிசம்பர்’24-ல் 6 bps குறைந்து 0.21% ஆக பதிவாகியிருக்கிறது.
• நழுவல் விகிதம், செப்டம்பர்’24-ல் 1.06% லிருந்து டிசம்பர்’24-ல் 0.78% ஆக குறைந்திருக்கிறது.
• கடன்கள் மீதான செலவு, செப்டம்பர்’24-ல் பதிவான 0.65% லிருந்து டிசம்பர்’24-ல் 18 bps குறைந்து 0.47% ஆக பதிவாகியிருக்கிறது.
• நிகர இலாபம், நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹5816 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் ₹7962 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 37% வளர்ச்சி கண்டிருக்கிறது
• செயல்பாட்டு இலாபம், நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹12535 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் ₹13980 கோடியாக 11.5% அதிகரித்திருக்கிறது
• நிகர வட்டி வருவாய், நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹17258 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் ₹18787 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 9% அதிகரித்திருக்கிறது
• உள்நாட்டளவில் நிகர வட்டி விளிம்பு (NIM), நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் 3.53% ஆக இருக்கிறது
• சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் இருந்த 1.04% என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் 27 bps உயர்ந்து 1.31% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் இருந்த 19.25% என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் 137 bps மேம்பட்டு 20.62% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• வருவாய்க்கான செலவு விகிதம் நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் இருந்த 45.17% என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் 50 bps குறைந்து 44.67% ஆக பதிவாகியிருக்கிறது
வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:
• இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5877 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1987 கிராமப்புறங்களிலும், 1543 சிறு நகரங்களிலும், 1179 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1168 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IBU-யும் (கிஃப்ட் சிட்டி கிளை) இருக்கின்றன.
• இவ்வங்கி, 5224 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 13292 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.
டிஜிட்டல் வங்கிச்சேவை:
• நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் டிஜிட்டல் சேனல்கள் வழியாக நடைபெற்ற பிசினஸின் மதிப்பு ₹1,18,981 கோடியாகும். இதுவரை 117 டிஜிட்டல் பயணங்களும், பயன்பாட்டு வசதிகளும், செயல்முறைகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன.
• மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 18% அதிகரித்து 1.86 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
• UPI பயனாளிகள் மற்றும நெட் பேங்கிங் பயனாளிகள் ஆகிய இரு தரப்பினரும், முந்தைய ஆண்டைவிட (YoY) முறையே 24% மற்றும் 9% என்ற அளவில் அதிகரித்து; முறையே 2.04 கோடி மற்றும் 1.12 கோடி என்ற அளவை இந்த எண்ணிக்கை எட்டியிருக்கிறது.
• கிரெடிட் கார்டு பயனாளிகளின் எண்ணிக்கை 52% உயர்ந்து 2.83 இலட்சமாப பதிவாகியிருக்கிறது. PoS-களின் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் முந்தைய ஆண்டைவிட 23% அதிகரித்து 35 இலட்சமாக இருக்கிறது.
விருதுகள் & பாராட்டுரைகள்
• இந்தியன் வங்கியின் ஒரு டிஜிட்டல் நிலைமாற்ற பயணமான “Project WAVE” மற்றும் சிறப்பு குறிப்பு கணக்குகளுக்கு (SMA) கடனைத் திரும்ப செலுத்த தவறுவதற்கான சாத்திய நிலையை முன்கணிக்கவும் மற்றும் இலக்குடன் கூடிய வசூல் பயணத்தை குறிப்பிடுவதன் வழியாக இடர்களை குறைக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு மாடலான “SMA Collection Proclivity Prediction” என்பதற்கு கௌரவமிக்க SKOCH விருதை இவ்வங்கி பெற்றிருக்கிறது.
• நிறுவன வகையினத்தில் “சிறந்த பொதுத்துறை வங்கி” என்ற விருது இவ்வங்கிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் & தலைமை செயலக்க அதிகாரிக்கு, தமிழ்நாடு தலைமைத்துவ விருதுகள் 2024 நிகழ்வில் ‘ஆண்டின் சிறந்த தலைமை செயலாக்க அதிகாரி’ என்ற விருது வழங்கப்பட்டது.
• CMS/SCF பிரிவின் தலைவருக்கு சிங்கப்பூரில் நடைபெற்ற பேமெண்ட்ஸ் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் கருத்தரங்கில் “Innovator & Disruptor in Asia Pacific” என்ற PT100 தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.
• இந்திய முதலீட்டாளர்கள் கூட்டமைப்பில் 9வது வங்கி தலைமைத்துவ உச்சி மாநாடு 2024-ல் “Best Infrastructure & Ambience in UP” ஆகிய விருதுகளையும் மற்றும் “Banker of the Year 2024” என்பதற்கான ரன்னர் அப் விருதையும் இவ்வங்கி பெற்றிருக்கிறது.
• IBA வருடாந்திர வங்கி தொழில்நுட்ப கருத்தரங்கு 2024 நிகழ்வில் பெரிய வங்கிக்கான சிறப்பு பிரிவில் “Best Digital Sales, Payments & Engagement”, “Best Tech Talent & Org., “Best AI and ML Adoption” மற்றும் “Best FI” ஆகிய செயல்பாடுகளுக்காக இவ்வங்கிக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
• 5வது வருடாந்திர BFSI தொழில்நுட்ப உயர்மேன்மை விருதுகள் 2024 நிகழ்வின்போது இவ்வங்கிக்கு “Best Cloud Initiative of the Year” – ET Edge recognition 2024 மற்றும் “Best Team Project in Cloud Implementation (PSB)” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
எமது கூர்நோக்கம்
அர்ப்பணிப்பும், திறனுமிக்க பணியாளர்கள் குழு மற்றும் அனைத்து வழிமுறைகளிலும் சிறப்பான அனுபவத்தின் வழியாக வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட, புத்தாக்கமான மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எமது கூர்நோக்கமாக இருக்கிறது. வாடிக்கையாளர் சேவை, CASA, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடர்ச்சியான டிஜிட்டல் நிலைமாற்றத்துடன் நல்லிணக்கம் கொண்ட நிலைப்புத்தன்மையுள்ள மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டுவது மீது நாங்கள் அர்ப்பணிப்போடு சிறப்பு கவனம் செலுத்துவோம்.
அனைத்து நிதிசார் மற்றும் வங்கிச் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதில் வாடிக்கையாளர்கள் விரும்பி தேர்வுசெய்யும் வங்கியாக உருவெடுப்பதே எமது நோக்கமாகவும், செயல்திட்டமாகவும் இருக்கிறது.