January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் சேதுபதி புதிய படத்தில் இளையராஜா யுவன் இணைந்து இசை
December 18, 2018

விஜய் சேதுபதி புதிய படத்தில் இளையராஜா யுவன் இணைந்து இசை

By 0 910 Views

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி தேனியில் துவங்கியது.

YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்துக்கு ‘தயாரிப்பு எண் 2’ என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையும் தாண்டி, மொத்தப் படமும் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதே என் கண்முன்னால் தெரிவதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

ysr films

பத்மவிபூசன் இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரே படத்தில் இணைந்து இசையமைப்பது இதுவே முதல் முறை, அதுவும் அது என் படத்தில் நடப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். மேலும் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைவது மிகவும் சிறப்பான விஷயம். குறிப்பாக, இந்த கூட்டணி தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற அரிய பொக்கிஷங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்.
YSR ஃபிலிம்ஸ் முதல் தயாரிப்பான ‘ப்யார் பிரேமா காதல்’ கடந்த ஆண்டு இதே நாளில் தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் தயாரிப்பாளர்கலீன் ஒருவரான இர்ஃபான் மாலிக்.

தர்மதுரை படத்துக்கு பிறகு சீனு ராமசாமி-விஜய் சேதுபதி-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியுடன் மீண்டும் இணைகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடிக்கிறார்.