October 17, 2025
  • October 17, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா?
April 4, 2020

மணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா?

By 0 845 Views

வன்மம் படத்தில் சேர்ந்து நடித்ததிலிருந்தே, நடிகர் கிருஷ்ணாவுக்கும், சுனைனாவுக்கும் லவ் பற்றிக்கொண்டதாக ஆன்லைனில் தகவல் பரவி வருகிறது.

நடிகர் கிருஷ்ணா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி என்பதும் இவர் ‘அலிபாபா’, ‘வல்லினம்’, ‘யாமிருக்க பயமே’, ‘யட்சன்’, ‘வன்மம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்த விஷயம்தான்.

அத்துடன் கிருஷ்ணா, ஏற்கனவே திருமணம் ஆனவர், சில பல கருத்து வேறுபாடுகளால் மனைவியை பிரிந்து விட்டார்.

சுனைனாவைப் பொறுத்தவரை ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து ‘மாசிலாமணி’, ‘நீர்ப்பறவை’, ‘சில்லு கருப்பட்டி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தனித்திருந்தாலும் இவர்கள் லவ்ஸ் தீயாக எரிகிறதாம்,

கொரோனா ஓய்ந்ததும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரும் என்கிறார்கள்.